பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவல் வேகமாக குறைகிறது பலி எண்ணிக்கையும் கணிசமாக குறைவு

Added : டிச 01, 2020
Share
Advertisement
புதுடில்லி:கடந்த மாதத்தில், கொரோனா பரவல் விகிதமும், பலி எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பரவலை கண்டறிய இதுவரை, 14.13 கோடிக்கும் மேலானோரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுஉள்ளன. கடந்த, 24 மணி நேரத்தில், 9.69 லட்சம் பேரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரி

புதுடில்லி:கடந்த மாதத்தில், கொரோனா பரவல் விகிதமும், பலி எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பரவலை கண்டறிய இதுவரை, 14.13 கோடிக்கும் மேலானோரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுஉள்ளன. கடந்த, 24 மணி நேரத்தில், 9.69 லட்சம் பேரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரி கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் வாயிலாக, 31 ஆயிரத்து, 118 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதியானது. இவர்களுடன், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 94 லட்சத்து, 62 ஆயிரத்து, 809 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு விகிதம்இவர்களில், 4.36 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களின் விகிதம் மொத்த பாதிப்பில், 4.60 சதவீதமாக உள்ளது.வைரஸ் பாதிப்பில் இருந்து, 88 லட்சத்து, 89 ஆயிரத்து, 585 பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 93.94 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

கொரோனாவால் கடந்த, 24 மணி நேரத்தில், 482 பேர் உயிரிழந்துள்ளனர். டில்லியில் அதிகபட்சமாக, 108 இறப்புகள் பதிவாகி உள்ளன. மஹாராஷ்டிராவில், 80; மேற்கு வங்கத்தில், 48; ஹரியானா மற்றும் பஞ்சாபில் தலா, 27; சத்தீஸ்கர் மற்றும் கேரளாவில் தலா, 21; குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா, 20 பேர் இறந்துள்ளனர்.இவர்களுடன், நாட்டில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 621 ஆக அதிகரித்துஉள்ளது; இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக உள்ளது.

மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக, 47 ஆயிரத்து, 151 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக கர்நாடகாவில், 11 ஆயிரத்து, 778 பேரும்; தமிழகத்தில், 11 ஆயிரத்து, 712 பேரும் பலியாகி உள்ளனர்.குறைவாகவே உள்ளதுகடந்த, 21 நாட்களாக கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. அக்., மாதத்தில், 18 லட்சத்து, 71 ஆயிரத்து, 498 பேரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த மாதம், 12 லட்சத்து, 78 ஆயிரத்து, 727 ஆக குறைந்துள்ளது.

முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் நிலையில், கடந்த மாதம் கொரோனா இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து உள்ளது. கடந்த மாதம், 15 ஆயிரத்து, 510 பேர் இறந்துள்ளனர்; இது, ஒட்டுமொத்த பலியில், 11.27 சதவீதம். அதேவேளையில் அக்., மாதத்தில், 22 ஆயிரத்து, 946 பேர் பலியாகி உள்ளனர். இது, அப்போதைய ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையில், 23.13 சதவீதமாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X