சந்தா கோச்சார் மேல்முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Added : டிச 01, 2020
Share
Advertisement
புதுடில்லி:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராஜினாமா சந்தா கோச்சார், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாயிலாக, 'வீடியோகான்' நிறுவனத்திற்கு, 1,875 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவர் தீபக் கோச்சாருக்கு ஆதாயம் பெற்றுத் தந்ததாக, அமலாக்கத் துறை வழக்கு

புதுடில்லி:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


ராஜினாமா



சந்தா கோச்சார், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாயிலாக, 'வீடியோகான்' நிறுவனத்திற்கு, 1,875 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவர் தீபக் கோச்சாருக்கு ஆதாயம் பெற்றுத் தந்ததாக, அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளது.சந்தா கோச்சார், 2018, அக்., 5ல், தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவரை பணி நீக்கம் செய்ததாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிவித்தது. அத்துடன், சந்தா கோச்சார், 2009 - 18 வரை பெற்ற போனஸ், வழங்கப்பட்ட பங்குகளை திரும்பப் பெறுவதாக, வங்கி தெரிவித்தது.

ராஜினாமா கடிதம் கொடுத்த பின், பணி நீக்கம் செய்து, பணப் பயன்களை திரும்பப் பெற்றதை எதிர்த்து, சந்தா கோச்சார், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, சந்தா கோச்சார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி, சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, தள்ளுபடி செய்தது.


இழப்பீடு

நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: தனியார் வங்கிக்கும், அதன் ஊழியருக்கும் இடையே பணி ஒப்பந்தத்தின் அடிப்படையிலான இந்த வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனுதாரர் பணி நீக்கத்திற்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், தன் கவுரவம் பாதிக்கப்படுவதாக மனுதாரர் கருதினால், அதற்கு உரிய வழியில் இழப்பீடு கோரலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X