நவ்சாரி:மும்பையில், 2008ல் தாக்குதல் நடத்திய பாக்., பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக கருதப்படும், குஜராத்தைச் சேர்ந்த, மூன்று மீனவர் குடும்பத்தாருக்கு, 12 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு கிடைத்துள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மும்பை கடற்கரைகடந்த, 2008, டிச. 26ல், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், பாக்., பயஙகரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.அவர்கள் கடல் வழியாக மும்பை வந்தனர். இந்த தாக்குதல் நடந்த நேரத்தில், மும்பை கடற்கரையோரம் ஒரு மீன்பிடி படகு மீட்கப்பட்டது. அதில், ஒரு மீனவரின் சடலம் இருந்தது.
குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மற்றும் டையூவைச் சேர்ந்த ஒரு மீனவர், இந்தப் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அதில், டையூவைச் சேர்ந்த மீனவரின் உடல் மட்டும் படகில் இருந்து மீட்கப்பட்டது. மற்றவர்களின் நிலை இதுவரை உறுதி செய்யப் பட வில்லை. அவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
ரூ.5 லட்சம்
'படகை மறித்த பயங்கரவாதிகள், அவர்களில் நான்கு மீனவர்களை கொன்றிருக்கலாம். மும்பையை அடைந்ததும், மற்றொரு மீனவரையும் கொன்றிருக்கலாம்' என, கூறப்படுகிறது. இந்த ஐந்து மீனவர்களில், இருவரின் குடும்பத்தாருக்கு, ஏற்கனவே நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள மூன்று மீனவர்களின் குடும்பத்தாருக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை, குஜராத் அரசு, வழங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE