ஷீலா ரஷீத் மீது தந்தை புகார்

Added : டிச 01, 2020
Share
Advertisement
ஸ்ரீநகர்:'டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவி ஷீலா ரஷீத்திடம், தேச விரோத செயல்கள் பற்றி விசாரிக்க வேண்டும்' என, அவரது தந்தை அப்துல் ரஷீத் ஷோரா, போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் ஷீலா ரஷீத். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவியான இவர், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை

ஸ்ரீநகர்:'டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவி ஷீலா ரஷீத்திடம், தேச விரோத செயல்கள் பற்றி விசாரிக்க வேண்டும்' என, அவரது தந்தை அப்துல் ரஷீத் ஷோரா, போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் ஷீலா ரஷீத். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவியான இவர், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து, சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்.நாட்டுக்கு எதிரான கருத்துக்களை அவர் பதிவிடுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அவர் மீது, தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஷீலா ரஷீத்தின் தந்தை அப்துல் ரஷீத் ஷோரா, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச, டி.ஜி.பி., தில்பக் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பயங்கர வாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் கைது செயயப்பட்டுள்ள ஜாஹுர் வட்டாலியும், முன்னாள், எம்.எல்.ஏ., ரஷீதும், ஷீலாவுக்கு, 3 கோடி ரூபாய் கொடுத்தனர். என் வீட்டிலேயே, தேச விரோத செயல்களுக்கான சதிகள் தீட்டப்பட்டன.

இதை எதிர்த்து கேட்டதால், என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார். தேச விரோத செயல்கள் பற்றி, ஷீலாவிடம் தீவிர மாக விசாரித்தால், பல உண்மைகள் வெளிவரும்.இவ்வாறு கடிதத்தில், அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ஷீலா ரஷீத் கூறியுள்ளதாவது: பொறுப்புள்ள தந்தையாக, என் தந்தை ஒரு போதும் நடந்து கொண்டதில்லை. வீட்டுக்கு வந்தால், எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி, என் தாயை அடிப்பார்.எங்கள் வீட்டுக்குள் நுழைய, அவருக்கு நீதிமன்றமே தடை விதித்துள்ளது; இதை மறைக்க, எங்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுகிறார். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X