திருவனந்தபுரம்:கேரள உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப் பதிவின் போது, ஓட்டுச் சாவடிகளில், கொரோனா நோயாளிகள் உள்ளதாக புரளியைக் கிளப்பி, மக்கள்மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, ஓட்டுப் பதிவை முடக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில உள்ளாட்சி தேர்தலை, அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில், கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும், 8, 10 மற்றும் 14ம் தேதிகளில், 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கின்றன. ஓட்டுகள், 16ல் எண்ணப்படுகின்றன.திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு, 8ம் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு மாவட்டங்களுக்கு, 10ம் தேதி இரண்டாம் கட்டத்திலும்; மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு, 14ம் தேதியும் ஓட்டுப் பதிவு நடக்கின்றன.
ஓட்டுப் பதிவின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், காலை, 11:00 மணிக்கு உள்ளாக, ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டளிக்கும்படி, அக்கட்சி சார்பில் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.காலை, 11:00 மணிக்கு மேல், ஓட்டுச் சாவடிகளில், கொரோனா நோயாளி இருப்பதாக புரளி கிளப்பி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, ஓட்டுப் பதிவை முடக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் பங்கேற்ற கூட்டத்தில், கட்சியினர் மத்தியில் அவர் வெளிப்படையாக இந்த சதித் திட்டத்தை பகிர்ந்த, 'வீடியோ' சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE