வாஷிங்டன்:மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை, இந்தியாவுக்கு கடத்த, அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பின்னணியாக செயல்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசித்தவருமான தஹாவூர் ராணாவை, அமெரிக்க போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை, லாஸ் ஏஞ்சலஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க அரசு சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:ராணாவை தலைமறைவு பயங்கரவாதி என, இந்தியா அறிவித்துள்ளது. ராணாவை, இந்தியாவுக்கு கடத்துவதில், பல சவால்கள் உள்ளன.விமானத்தில் அழைத்துச் சென்றால், பயங்கரவாதிகளால், விமானத்துக்கும், பயணியருக்கும், எந்த ஆபத்தும் ஏற்படாது என, ஆதாரப்பூர்வமாக உறுதியளிக்கப்படவில்லை. அதனால், இந்தியாவுக்கு ராணாவை நாடு கடத்துவதை, அமெரிக்க அரசு எதிர்க்கிறது.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE