வாஷிங்டன்:சீக்கிய மத குருவான, குரு நானக் தேவின், 551வது பிறந்தநாளையொட்டி, சீக்கியர்களுக்கு, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி யுள்ளதாவது: குருநானக் தேவின் சிந்தனைகள் விலை மதிப்பில்லாதது; உலகம் முழுவதுக்கும் பொருந்தக் கூடியது. அவர் வலியுறுத்திய ஆன்மிக உபதேசங்கள், மனிதகுலத்துக்கான சேவை, ஒற்றுமையாக வாழ்வது போன்றவற்றை, சீக்கியர்கள் உலகெங்கும் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கும் உந்துதலாக இருந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காலத்தில் சீக்கிய மக்களின் சேவைகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE