பொது செய்தி

இந்தியா

'தடுப்பூசியில் பக்கவிளைவு கிடையாது'

Added : டிச 01, 2020
Share
Advertisement
புதுடில்லி:'ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி, பாதுகாப்பானது; நோய் எதிர்ப்பு திறன் உடையது' என, இந்திய சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலையும், ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு

புதுடில்லி:'ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி, பாதுகாப்பானது; நோய் எதிர்ப்பு திறன் உடையது' என, இந்திய சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலையும், ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.இந்த மருந்தை, நம் நாட்டில் பரிசோதித்து, உற்பத்தி செய்யும் பணியை, மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, இந்திய சீரம் நிறுவனம் ஏற்றுள்ளது.

இந்த மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் தற்போது நடக்கின்றன. இந்நிலையில், தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவருக்கு, நரம்பு மற்றும் மனநிலை தொடர்பான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த குற்றச்சாட்டை, இந்திய சீரம் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.இது குறித்து, சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:தடுப்பூசி செலுத்திய தன்னார்வலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது துரதிஷ்டவசமானது. அவருக்கு ஏற்கனவே இருந்த உடல் உபாதைகள் காரணமாக, இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கும், தடுப்பு மருந்துக்கும் தொடர்பு இல்லை.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், இந்த விபரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் சமர்ப்பித்தோம். அவர்கள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின், பரிசோதனை பணிகளை, தற்போது மீண்டும் துவங்கியுள்ளோம்.தடுப்பு மருந்து மீது, அவதுாறாக புகார் தெரிவித்து, மக்கள் மத்தியில் வீண் பதற்றத்தை ஏற்படுத்திய தன்னார்வலருக்கு சட்ட ரீதியாக, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்து, பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு திறன் உடையது; இது உறுதி செய்யப்பட்ட பின்பே, மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்பதை உறுதி அளிக்கிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X