மூணாறு:தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்குமலைக்கு, எட்டு மாதங்களுக்கு பின், சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், மூணாறு அருகேயுள்ள சுற்றுலா தலம், கொழுக்குமலை; இது, தமிழகத்தின், தேனி மாவட்டம், கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. மூணாறு சூரியநல்லியில் இருந்து, 12 கி.மீ., துாரம், கரடுமுரடான சாலையில் ஜீப்பில் பயணித்து, கொழுக்குமலைக்கு செல்ல வேண்டும். சூரிய உதயத்தை இங்கிருந்து ரசிக்கலாம். குளிர்காலத்தில் கடல் அலை போல் தவழும் மேகங்களை காண, பயணியர் அதிகம் வந்து செல்வர்.
கொரோனா ஊரடங்கால் மார்ச், 30 முதல், கொழுக்குமலைக்கு சுற்றுலா பயணியர் அனுமதிக்கப் படவில்லை. சுற்றுலாவை நம்பி தொழில் செய்யும் ஆயிரக்கணக்கானோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணியரை அனுமதிக்கக் கோரி, டிரைவர்கள் மற்றும் சூரியநல்லி வர்த்தகர்கள், சமீபத்தில் சின்னக்கானல் ஊராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன், கொழுக்குமலைக்கு சுற்றுலா பயணியர் செல்ல, எட்டு மாதங்களுக்குப் பின், மாவட்ட நிர்வாகம், நேற்று அனுமதி அளித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE