சென்னை:பா.ஜ., நடத்திய, 'வெற்றிவேல் யாத்திரை' நிறைவு விழா, வரும், 7ம் தேதி திருச்செந்துாரில் நடக்க உள்ளது. இதில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பங்கேற்க உள்ளார்.
தமிழக பா.ஜ., சார்பில், மாநில தலைவர் முருகன், நவ., 6ல், திருத்தணியில், 'வெற்றிவேல் யாத்திரை'யை துவக்கினார். வட மாவட்டங்களில் யாத்திரை நடந்தது. நிவர் புயல் காரணமாகவும், மீட்பு பணிகளில், பா.ஜ., நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும், வெற்றிவேல் யாத்திரை நிறுத்தப்பட்டது.நிவாரணப் பணிகள் காரணமாக, யாத்திரை ரத்து செய்யப்பட்ட, அறுபடை வீடுகளான சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் கோவில்களில், வரும், 5ம் தேதி, மாநிலத் தலைவர் முருகன், தரிசனம் செய்கிறார்.
யாத்திரை நிறைவு நிகழ்ச்சி, வரும், 7ம் தேதி திருச்செந்துாரில் நடக்க உள்ளது. இதில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE