அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரள அணை திட்டம்: தடுக்க அழகிரி கோரிக்கை

Added : டிச 01, 2020
Share
Advertisement
சென்னை:'முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக, கேரள அரசு, புதிய அணை கட்டும் முயற்சியைத் தடுக்க, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மேகதாது போன்ற பிரச்னைகளில், தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை:'முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக, கேரள அரசு, புதிய அணை கட்டும் முயற்சியைத் தடுக்க, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மேகதாது போன்ற பிரச்னைகளில், தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. கேரள அரசு, புதிய அணை கட்டுவதற்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை, திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த எடுத்த முயற்சிகளுக்கு, கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

மேலும், கேரள அரசு, புதிய அணை கட்டுவதற்கான முயற்சிக்கு, மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் ஆதரவாகச் செயல்படுவது கண்டனத்துக்குரியது.எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக, கேரள அரசு, புதிய அணை கட்டும் முயற்சியை தடுப்பதற்கு, முதல்வர் இ.பி.எஸ்., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X