பொது செய்தி

தமிழ்நாடு

விடுதி சமையலர் பணிக்கு நேர்காணல் 20 பணியிடத்திற்கு 1,136 பேர் விண்ணப்பம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணிக்கான நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் 14 ஆண், 6 பெண் என மொத்தம் 20 சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடத்தை நிரப்ப கடந்த செப்டம்பர் மாதம் தகுதியான நபர்களிடம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணிக்கான நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் 14 ஆண், 6 பெண் என மொத்தம் 20 சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடத்தை நிரப்ப கடந்த செப்டம்பர் மாதம் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில், 491 பெண்கள், 645 ஆண்கள் என பட்டதாரிகள் உட்பட 1,136 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

பணிக்கான நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.பிற்படுத்தப்பட்ட நலத்துறை இயக்குனரின் பிரதிநிதி ரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் சையத்அப்துல் பாரி, துணை இயக்குனரின் பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நேர்க்காணல் செய்து, சான்றிதழ்களை சரிபார்த்தனர். வரும் 5ம் தேதி வரை நேர்க்காணல் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள், நேர்காணல் கடிதத்தை எடுத்து வரும்படி அறிவுறுத்தப் பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X