கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'அரியர்' தேர்வு முடிவு வெளியிட பல்கலைகளுக்கு ஐகோர்ட் தடை

Added : டிச 01, 2020
Share
Advertisement
சென்னை:தேர்வுகள் நடத்தாமல், 'அரியர்' தேர்வு முடிவுகளை வெளியிட, பல்கலைகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற செமஸ்டர்களுக்கான கட்டணம் செலுத்து வோருக்கு, தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை, 2020 ஆக., 26ல்

சென்னை:தேர்வுகள் நடத்தாமல், 'அரியர்' தேர்வு முடிவுகளை வெளியிட, பல்கலைகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற செமஸ்டர்களுக்கான கட்டணம் செலுத்து வோருக்கு, தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை, 2020 ஆக., 26ல் பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், 'உயர் கல்வி துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 'கல்லுாரி மாணவர்களுக்கு, அரியர் தேர்வை நடத்தும்படி, உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியர் தேர்வு எழுதாமல், அதன் முடிவுகளை, பல்கலைகள் வெளியிடக் கூடாது; ஏற்கனவே வெளியிட்டிருந்தால், அவற்றை வாபஸ் பெறவும் கோரி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்தார்.இம்மனுக்கள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில்,விசாரணைக்கு வந்தன.

'பல்கலை மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக, தேர்வு நடத்தாமல், எப்படி முடிவுகளை ெவளியிடலாம்?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, சென்னை பல்கலை மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேர்வு நடத்தாமல், முடிவுகளை வெளியிடவும், பல்கலைகளுக்கு தடை விதித்தனர்.

அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த மனுக்களின் விசாரணையின்போது, காணொலி காட்சியில் மாணவர்கள் நுழைந்து இடையூறு ஏற்படுத்தியதற்கும், விசாரணையை, 'யு டியூப்'பில் ஒளிபரப்பி யதற்கும், நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நீதிபதிகள் எச்சரித்தனர்.இந்த வழக்கு விசாரணையை, நீதிமன்றத்தில் நேரடியாக நடத்துவதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஜன., 11க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X