பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய குழு வருகை ஒத்திவைப்பு

Added : டிச 01, 2020
Share
Advertisement
சென்னை:தமிழகத்திற்கு, மேலும் புயல் அபாயம் உள்ளதால், மத்திய குழு வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.'நிவர்' புயல், நவ., 25 நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் மற்றும் கன மழை காரணமாக, தமிழகத்தில், சென்னை, கடலுார், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது.பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, சேதம் மதிப்பு குறித்து,

சென்னை:தமிழகத்திற்கு, மேலும் புயல் அபாயம் உள்ளதால், மத்திய குழு வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

'நிவர்' புயல், நவ., 25 நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் மற்றும் கன மழை காரணமாக, தமிழகத்தில், சென்னை, கடலுார், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது.பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, சேதம் மதிப்பு குறித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க, ஏழு பேர் கொண்ட குழுவை, மத்திய அரசு நியமித்தது. இக்குழு ,சென்னை வருவதாக இருந்தது.

இந்நிலையில், மீண்டும் வங்கக் கடலில் புயல் உருவாகி உள்ளது. 'புரெவி' எனப்படும் புதிய புயல், 4ம் தேதி பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக, மத்திய குழு வருகை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 'புரெவி' புயல் கரையை கடந்த பின், வரும், 5ம் தேதி, மத்திய குழு தமிழகம் வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X