சென்னை:உடன்குடி அனல் மின் நிலையத்திற்காக, கடலில் அமைக்கப்படும் நிலக்கரி முனையத்திற்கு வழங்கிய அனுமதியை நீட்டிக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், தமிழக மின் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், மின் வாரியம் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைத்து வருகிறது. அதற்கு பயன்படுத்தப்பட உள்ள நிலக்கரியை கொட்டி வைக்க, உடன்குடி கடற்கரையில் இருந்து, 7.91 கி.மீ., துாரம் கடலில், நிலக்கரி முனையம் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து, 'கன்வேயர் பெல்ட்' வாயிலாக, மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வரப்பட உள்ளது.
ஆண்டுக்கு, 1.50 கோடி டன் நிலக்கரி கையாளும் திறன் உடைய உடன்குடி முனையத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்கும், கடலோர ஒழுங்குமுறை அமைப்பு, 2013ல் அனுமதி வழங்கியது. அந்த அனுமதி, 2021 ஜூன் மாதம் முடிவடைகிறது.
கட்டுமான பணி, இதுவரை முடிவடையவில்லை. இதனால், உடன்குடி நிலக்கரி முனைய பணிக்கு வழங்கிய அனுமதியை, கூடுதலாக, மூன்று ஆண்டுகள், அதாவது, 2023 வரை நீட்டிக்குமாறு தற்போது, மின் வாரியம், சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE