ம.பி., அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் பலி

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
போபால் : மத்திய பிரதேசத்தின் ஷாடோல் மருத்துவமனையில் 4 நாட்களில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கான விசாரணை நடத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் ஷாடோல் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் சிகிச்சையில் இருந்த 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதற்கான விசாரணையை மாநில அரசு துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போபால் : மத்திய பிரதேசத்தின் ஷாடோல் மருத்துவமனையில் 4 நாட்களில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கான விசாரணை நடத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news



மத்திய பிரதேசத்தின் ஷாடோல் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் சிகிச்சையில் இருந்த 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதற்கான விசாரணையை மாநில அரசு துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ மனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான நோய் தீர்க்கும் பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகளில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டதாக ஷாடோலின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி ராஜேஷ் பாண்டே தெரிவித்தார்.


latest tamil news



இது தொடர்பாக அவர் கூறுகையில், ஷடோலின் மருத்துவமனையில் நவ.,27 முதல் 30 வரையான இந்த 4 நாட்களில் மட்டும் 8 குழந்தைகளின் மரணம் பதிவு செய்யப்பட்டன. அவர்களில் 2 பேர் அனுப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். மேலும் பலியான குழந்தைகளில் ஒன்று, 4 மாத குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் தற்போது எஸ்என்சியு பிரிவில் 33 குழந்தைகளும், பிஐசியு பிரிவில் 8 குழந்தைகளும் உள்ளனர். இவ்வாறு கூறினார். தொடர்ந்து, குழந்தைகளின் இறப்புக்கு மருத்துவமனையின் அலட்சியம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மற்ற குழந்தைகளின் சிகிச்சைக்கு தேவைப்பட்டால் ஜபல்பூரில் இருந்து சிறப்பு மருத்துவர்களை ஷாடோல் மருத்துவமனைக்கு அனுப்புவதாகவும் சவுகான் கூறியுள்ளார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி கூறுகையில், குழந்தைகளின் இறப்புக்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதாரத்தின் கூடுதல் தலைமை செயலாளர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-டிச-202014:17:43 IST Report Abuse
ஆரூர் ரங் முன்பும் இப்போதும் இந்தியாவில் பச்சிளம் சிசு மரணம் அதிகம்தான். பெரும்பாலும் தாய்மார்களின்😇 அறியாமை , சமவிகித🍜 உணவின்மை , அடிக்கடி குழந்தை பெறுதல், எடை குறைவாகப் பிறத்தல் போன்றவையே காரணம். மேலும் பெரிய TERTIARY CARE மருத்துவமனைகளை நோயாளிகள் தாமதமாகவே அணுகுகிறர்கள் . அதனால் இந்த இறப்பு கூடுதலாகத்தான் இருக்கும் . அரசியல் செய்வதற்கு பதில் தாய்மார்களின் விழிப்புணர்வுக்கு முயலலாம்
Rate this:
rajan - erode,இந்தியா
03-டிச-202009:17:27 IST Report Abuse
rajanநல்ல கருத்து - அரசு இதை செய்தால் நல்லது...
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
02-டிச-202008:11:37 IST Report Abuse
rajan நாட்டின் ஜனத்தொகையை குறைக்க பிஜேபியின் கொள்கை - குழந்தைகள் சாவு
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
02-டிச-202000:36:31 IST Report Abuse
Vena Suna அடப்பாவிங்களா..அக்கறை வேண்டாமா? காசை சம்பாதிக்க தான் அக்கறை... டாக்டர்ஸ் கேவலம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X