அரசியல் செய்தி

தமிழ்நாடு

தபால் ஓட்டு வேண்டாம் ஆணையத்தில் தி.மு.க., மனு

Added : டிச 02, 2020
Share
Advertisement
தபால் ஓட்டு முறையில், அதிக அளவு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி, அதை கைவிடும்படி, தலைமை தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.கள்ள ஓட்டுகள்டில்லியில் நேற்று, தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்திருந்த, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையர்களிடம் அளித்த கோரிக்கை மனு:மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நேரடியாக

தபால் ஓட்டு முறையில், அதிக அளவு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி, அதை கைவிடும்படி, தலைமை தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.


கள்ள ஓட்டுகள்

டில்லியில் நேற்று, தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்திருந்த, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையர்களிடம் அளித்த கோரிக்கை மனு:மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நேரடியாக தேர்தலில் ஓட்டளிக்கும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது, இந்த நடைமுறைக்கு பதிலாக, அவர்களுக்காக, தபால் ஓட்டு போடும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பீஹார் சட்டசபைத் தேர்தலின்போது அமலுக்கு வந்த இந்த நடைமுறையை, தமிழக சட்டசபை தேர்தலிலும் பின்பற்ற, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.இது, நேர்மையாக ஓட்டளிக்கும் முறைக்கு எதிரானது; கள்ள ஓட்டுகள் போடுவதற்கே வழிவகுக்கும். முறைகேடான வழிகளுக்கு, நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்பதால், இந்த தபால் ஓட்டுமுறையை கைவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


பல முறைகேடுகள்

பின், நிருபர்களிடம் பாலு கூறியதாவது:ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது, ஏற்கனவே விமர்சனங்கள் உள்ளன. இயந்திரங்கள் குறித்து, ஒவ்வொரு தேர்தலிலும், அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாக, புகார்கள் வருகின்றன.இந்நிலையில், தபால் ஓட்டு முறையை அமல்படுத்துவதன் வாயிலாக, மேலும் பல முறைகேடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X