அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆரம்பமானது அழகிரியின் 'டூர்': கலக்கத்தில் தி.மு.க., நிர்வாகிகள்

Updated : டிச 03, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
கலைஞர் தி.மு.க., என்ற புது கட்சியை துவங்கும் திட்டத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தனது 'டூர் ஆரசியல்' மூலம் 'ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வை திணறடிக்க புறப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, அரசியலில் தன் பலத்தை நிரூபிக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் தி.மு.க.,வுக்கு குடைச்சல் கொடுத்து திணறடிப்பார். இதற்காக
 ஆரம்பமானது அழகிரியின் 'டூர் அரசியல்' கலக்கத்தில் தி.மு.க., நிர்வாகிகள்

கலைஞர் தி.மு.க., என்ற புது கட்சியை துவங்கும் திட்டத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தனது 'டூர் ஆரசியல்' மூலம் 'ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வை திணறடிக்க புறப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, அரசியலில் தன் பலத்தை நிரூபிக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் தி.மு.க.,வுக்கு குடைச்சல் கொடுத்து திணறடிப்பார். இதற்காக ஆதரவாளர்கள் சந்திப்பு என்ற பெயரில் 'டூர் அரசியல்' அஸ்திரத்தை கையில் எடுப்பார்.போகிற இடங்களிலெல்லாம் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் பெயர்களை 'பஞ்சர்' ஆக்கும் பேட்டி கொடுத்து அக்கட்சி வெற்றிக்கு 'செக்' வைப்பார்.தற்போதும் புதிய கட்சி துவங்கும் எண்ணத்தில் உள்ள அழகிரி, தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ள தனது முன்னாள் ஆதரவாளர்களை அவர்கள் வீடுகளுக்கு சென்று சந்திக்கும் பயணத்தை துவங்கியுள்ளார்.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யான அக்னிராஜ் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல் அறிக்கை மட்டுமே கொடுத்திருந்தார். இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட அவரது வீட்டை எட்டிப்பார்க்கவில்லை.ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, அக்னிராஜின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தி.மு.க.,விற்கு முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபி சகோதரர் மருது (கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் தொடர்புள்ளவர்) மாரடைப்பால் இறந்தார். இதற்கும் ஸ்டாலின் தரப்பிலோ, கட்சி சார்பிலோ கோபியிடம் துக்கம் விசாரிக்கவில்லை. ஆனால் எஸ்.ஆர்.கோபி வீட்டிற்கே அழகிரி சென்று துக்கம் விசாரித்து தி.மு.க., தலைமைக்கு மேலும் ஒரு 'ஷாக்' கொடுத்துள்ளார். இது அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:தி.மு.க., நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாக ஸ்டாலினுக்கு உணர்த்தியுள்ளார். இனி தி.மு.க.,விற்கு மேலும் பல நெருக்கடிகளை கொடுப்பார். எஸ்.ஆர். கோபி வீட்டிற்கு அழகிரி சென்றதில் பல அரசியல் கணக்கு உள்ளது.முதலில், கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் இன்னும் பலர் அழகிரியின் தொடர்பில் உள்ளனர் என நிரூபணமாகியுள்ளது.கோபி தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்கிறார். அழகிரி சந்திப்பால் அவர் மீதான கட்சி நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது இனிமேல் தெரியும். அவர்கள் போன்றோர் வேறு வழியின்றி அழகிரி பக்கம் வந்தாக வேண்டும். முக்கிய நிர்வாகிகள் வெளியேறினால் கட்சி பலவீனமாகிவிடும். இதுபோன்ற 'டூர் அரசியலை' இன்னும் அழகிரி தொடர்வார் என்றனர்.


புதிய கட்சி துவங்கும் முடிவு
"ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் புதிய கட்சி துவங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்" என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் எனது பங்கு இருக்கும். புதிய கட்சி தொடங்குவது குறித்து போகப்போகத் தான் தெரியும். தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் அறிவிப்பேன். பா.ஜ.,வில் இணைய போகிறேன், அமித்ஷாவை சந்திக்க போகிறேன் என்பதெல்லாம் வதந்தி. நவ.,20 ல் நடக்க இருந்த ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தங்கள் மகன் தயாநிதிக்கு தி.மு.க.,வில் பதவி வழங்கப்படவுள்ளதா என்ற கேள்விக்கு 'யார் சொன்னது,' என்றார். -நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
02-டிச-202023:38:26 IST Report Abuse
Vijay D Ratnam திமுகவில் ஸ்டாலினை இருபது சதவிகித பேருக்கு பிடிக்கவில்லை. அவருடைய பேச்சாற்றல், கல்வியறிவு, பொது அறிவு நாட்டுக்கே தெரியும். பேசிப்பேசியே வளர்த்த கட்சி அது. கருணாநிதி மவன் என்பதால் கட்சிக்காரர்கள் வேறு வழியில்லாமல், பல்லை கடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போ அழகிரி இறங்கினால் ஸ்டாலினை விரும்பாத என்பது சதவிகித கட்சிக்காரர்களில் கால்வாசி பேர் அழகிரி பின்னால் திரண்டால், அதோடு ஸ்டாலின் கனவு டமால். சீனி சக்கர சித்தப்பா கனவில் இடிவிழுந்தது போலாகிடும். ஒன்னு பெர்னாட்ஷா, இன்னொன்னு சாக்ரட்டீஸ் என்பது வேறு விஷயம். கட்சி காலியாவது உறுதி.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
02-டிச-202020:08:09 IST Report Abuse
sridhar எல்லா அழகிரியும் டம்மி பீஸ் தான் .
Rate this:
karutthu - nainital,இந்தியா
09-டிச-202017:23:28 IST Report Abuse
karutthuஎல்லா அழகிரியும் டம்மி பீஸ்தான் ......ஸ்ரீதர் சென்னை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அழகிரியும் டம்மி பீஸ் தானா ? அடக்கடவுளே...
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
02-டிச-202014:55:41 IST Report Abuse
Sivaraman போட்டி கடுமையானதாக ஆக்குவார் ஒரு எதிர் பார்க்காத திருப்புமுனையாக இந்த தேர்தல் அமையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X