சென்னை:'அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, இணையதளம் வழியாக பதிவு செய்யலாம்' என, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அரசு மற்றும் அரசு உதவி பெறும், கல்வியியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கான, பி.எட்., பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, www.tngasaedu.in என்ற இணையதளத்தில், வரும், 4ம் தேதி முதல், 10ம் தேதி வரை பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய, விண்ணப்ப கட்டணமாக, 500 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., விண்ணப்பதாரர்கள், 250 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, தங்கள் விருப்ப வரிசைப்படி, கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். தங்களின் சான்றிதழ்களையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்கள், எந்தெந்த கல்லுாரிகளில், என்ன பாடப் பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் பதிவு செய்வதில், ஏதேனும் சிரமம் இருந்தால், மாணவர்கள், 044 - 2235 1014, 2235 1015, 2827 8791 ஆகிய தொலைபேசி எண்களில், காலை, 10:00 மணியில் இருந்து, மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொண்டு, விபரம் அறியலாம்.
மேலும், care@tngasaedu.org, tndceoffice@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரி வழியே, சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.இவ்வாறு, அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE