பொது செய்தி

தமிழ்நாடு

துவக்கப்பட்டது 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' குழு

Updated : டிச 03, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
பெங்களூரு:தென் மாநிலங்களில் இருந்து வெளியாகும், 'தினமலர், ஈநாடு, மனோரமா ஆன்லைன், பிரஜாவாணி நியூஸ்' ஆகிய நாளிதழ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, எஸ்.பி.பி., எனப்படும், 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பில் விளம்பரம் தரும் வாடிக்கையாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள், ஒரே நேரத்தில், நான்கு மாநில மொழி நாளிதழ்களின், 'டிஜிட்டல்'

பெங்களூரு:தென் மாநிலங்களில் இருந்து வெளியாகும், 'தினமலர், ஈநாடு, மனோரமா ஆன்லைன், பிரஜாவாணி நியூஸ்' ஆகிய நாளிதழ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, எஸ்.பி.பி., எனப்படும், 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.latest tamil newsஇந்த அமைப்பில் விளம்பரம் தரும் வாடிக்கையாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள், ஒரே நேரத்தில், நான்கு மாநில மொழி நாளிதழ்களின், 'டிஜிட்டல்' வாசகர்களை, உலகம் முழுதும் சென்று சேர அரிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு தென் மாநில மொழிகளில், முறையே, 'தினமலர், ஈநாடு, மலையாள மனோரமா, பிரஜாவாணி நியூஸ்' ஆகிய நாளிதழ்கள், ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக கோலோச்சி வருகின்றன.

தமிழகத்தில், சார்பு நிலையின்றி மக்கள் பிரச்னைகளை துணிச்சலுடன் வெளியிட்டு வருவதில், 'தினமலர்' நாளிதழுக்கு என்றுமே தனி இடம் உள்ளது.இந்நிலையில், 'டிஜிட்டல்' ஊடகத்திலும், 'தினமலர்' நாளிதழ் முன்னணி வகிக்கிறது. இதன் செய்தி இணையதளத்தை, 90 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இணைய பக்கங்களை, 17 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிடுகின்றனர்.


latest tamil newsஉலக அளவில், முன்னணி தெலுங்கு நாளிதழ் என்ற பெருமைக்குரிய, ஈநாடு, 'டிஜிட்டல்' ஊடகத்திலும் முன்னிலை வகிக்கிறது.இதன் செய்தி இணைய தளத்தை, பல்வேறு நாடுகளில் பணியாற்றும், ஆண், பெண், இளம் மென் பொறியாளர்கள் உட்பட, லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.மலையாள முன்னணி நாளிதழான, 'மலையாள மனோரமா' கடந்த, 23 ஆண்டுகளாக, 'டிஜிட்டல்' தளத்தில் செய்திகளை வழங்கி வருகிறது.

உலகம் முழுதும் வசிக்கும், 3.60 கோடி வாசகர்களை, 'மனோரமா ஆன்லைன்' இணையதளம் சென்றடைகிறது. கன்னடத்தில் முன்னணி வகிக்கும், 'பிரஜாவாணி நியூஸ்' நாளிதழின், 'டிஜிட்டல்' தளமாக, 'பிரஜாவாணி டாட் நெட்' செயல்பட்டு வருகிறது.மாநிலத்தின், 30 மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூர் செய்திகளுக்கும், இந்த இணையதளம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நான்கு மாநிலங்களிலும், வாசகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக இயங்கிவரும் இந்த முன்னணி நாளிதழ்களின் இணைய விளம்பர பிரிவுகளை இணைத்து, அமைப்பு ஒன்றை உருவாக்க, திட்டம் வகுக்கப்பட்டது.இந்த அமைப்புக்கு, எஸ்.பி.பி., எனப்படும், 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது.

இந்த, எஸ்.பி.பி., அமைப்பில் அங்கம் வகிக்கும் செய்தி இணையதளங்களுக்கு, 3.70 கோடி பயனாளர்கள் உள்ளனர். இதன் பக்கங்கள், 71 கோடியே, 50 லட்சம் முறை பார்வையிடப்படுகின்றன. மேலும், இந்த செய்தி தளங்களை, சராசரியாக, 3.36 நிமிடங்களில் இருந்து, 8.09 நிமிடங்கள் வரை, வாசகர்கள் பார்வையிடுகின்றனர்.இந்த நான்கு இணையதளங்களிலும் வெளியாகும் விளம்பரங்கள், ஒரு மாதத்தில், 300 கோடி முறை பார்வையிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

'ஆன்லைன்' விளம்பரங்களை தரம் பிரிக்கும், 'கூகுள் அனலிடிக்ஸ்' அறிக்கை, இந்த தகவல்களை உறுதிப்படுத்திஉள்ளது. இந்த, 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' இணைப்பு குறித்து, 'தினமலர்' நாளிதழின், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் இயக்குனர், எல்.ஆதிமூலம் கூறியதாவது:இந்திய விளம்பர சந்தையில், கடந்த, 2019 - 20ம் ஆண்டில், 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் நடந்துள்ளது. இதில், 21 சதவீத விளம்பரங்கள், 'டிஜிட்டல்' ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தென் மாநிலங்களின் முன்னணி, 'டிஜிட்டல்' நாளிதழ்களுக்கு விளம்பரம் வழங்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு, எஸ்.பி.பி., அமைப்பு, மிகப்பெரிய நல்வாய்ப்பை ஏற்படுத்த உள்ளது.தென் மாநிலம் முழுதும், தங்கள் விளம்பரத்தை கொண்டு சேர்க்க விரும்புபவர்கள், எஸ்.பி.பி., அமைப்பின் வாயிலாக, ஒரு புள்ளியில் தங்கள் விளம்பரங்களை அளிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.விளம்பரங்களின் வீச்சு மட்டுமல்லாமல், கட்டணத்திலும், கணிசமான தொகையை, வாடிக்கையாளர்கள் மிச்சம் பிடிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'மனோரமா ஆன்லைன்' ஊடகத்தின், தலைமை செயல் அதிகாரி, மரியம் மேமன் மாத்யூ கூறுகையில், ''ஒவ்வொரு விளம்பரதாரர்களுக்கும் தனித்தனி தேவைகள் உள்ளன. அவை, இந்த அமைப்பின் மூலம், நிச்சயம் நிறைவேறும்,'' என்றார்.

'பிரஜாவாணி டாட் நெட்' இணையதளத்தின், தலைமை செயல் அதிகாரி, அர்பன் சாட்டர்ஜி கூறுகையில், ''சரியான வாடிக்கையாளர்களை விளம்பரங்கள் சென்று சேர, விளம்பரதாரர்களுக்கு எஸ்.பி.பி., அமைப்பு சரியான தளமாக விளங்கும்,'' என்றார்.

'ஈநாடு' இணையதள இயக்குனர், வெங்கட் கூறுகையில், ''தென் மாநிலங்களில் வசிக்கும், உயர்தர வாடிக்கையாளர்களை சென்று சேர, எஸ்.பி.பி., பெரும் தீர்வாக அமையும்,'' என்றார்.

'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' அமைப்புக்கு,
www.southpremiumpublishers.com
என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில், மேலும் அதிக தகவல்கள் தரப்பட்டுள்ளதாக, நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabakaran - cuddalore,குவைத்
03-டிச-202009:57:26 IST Report Abuse
prabakaran செம காமெடி
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
03-டிச-202008:51:24 IST Report Abuse
Sampath Kumar இது எதுக்காக? யாருக்காக?ஏன்? என்று சொல்ல முடியுமா ?
Rate this:
Cancel
02-டிச-202017:08:03 IST Report Abuse
மாயவரம் சேகர் தினமலர் நாளிதழ்க்கு வாழ்த்துக்கள்.மேலும் மேலும் பல நல்ல முன்னேற்றங்களை அடைய வாழ்த்துக்கள்.தினமலரால் தமிழ்நாட்டிற்கும் உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பெருமை.வாழ்க வளர்க 👍👌🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X