திருப்பூர்:இளம் வயதினருக்கு பாலியல் குறித்த புரிதலை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.டிச. முதல் தேதி, உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில், என்.எம்.சி.டி., சேவை நிறுவனம் சார்பில், ஸ்ரீனிவாசா மஹாலில் நேற்று உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடந்தது.
இந்த அமைப்பு சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் வாழ்க்கை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மற்றும் குடும்பத்தாருக்கு பல்வேறு விதமான உதவி மற்றும் வழிகாட்டுதல் சேவை வழங்கப்படுகிறது.நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் சங்கரநாராயணன் வரவேற்றார். சி.ஐ.ஐ., முன்னாள் தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமை வகித்து, அமைப்பின் சேவைகளை பாராட்டி பேசினார்.வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், ஜெர்மன் கே.கே.எஸ்., அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ெஹய்க் ெஷல்வேடர், மருத்துவ பணி இணை இயக்குநர் பாக்கியலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், திட்ட மேலாளர் ஹரிஹரகுகன் உட்பட பலர் பேசினர்.
முன்னதாக, விழிப்புணர்வு கையேட்டை, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் வெளியிட்டு பேசுகையில், ''இளம்வயதினருக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படுத்த வேண்டும். இளம் வயதி லேயே, தவறான செயலில் ஈடுபடாமல், பெற்றோர் பாதுகாத்திட வேண்டும்,'' என்றார்.வாழ்க்கை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் குடும்பத்தில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு நினைவு பரிசு, சில மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியன வழங்கப்பட்டது வாழ்க்கை திட்ட ஒருங்கிணைப்பாளர் கரிகாலன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE