கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருக்கோவில் 'டிவி' தடை கோரி வழக்கு

Added : டிச 02, 2020
Share
Advertisement
மதுரை:திருக்கோவில், 'டிவி' துவங்க தடை விதிக்க கோரிய வழக்கில், 'உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக அறநிலையத் துறையின் கீழ், 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான

மதுரை:திருக்கோவில், 'டிவி' துவங்க தடை விதிக்க கோரிய வழக்கில், 'உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக அறநிலையத் துறையின் கீழ், 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோவில்களில், அர்ச்சகர் அல்லது பூஜாரிகள் மட்டுமே உள்ளனர். அவர்களே பூஜை செய்வது, பராமரிப்பது, பக்தர்களுக்கு உணவு தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

வாட்ச்மேன்கள், துாய்மைப் பணியாளர்கள் இல்லை. இதனால், கோவில்கள் பாதுகாப்பு, பராமரிப்பின்றி உள்ளன. கோவில்களின் முக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, 8.77 கோடி ரூபாயில் திருக்கோவில், 'டிவி' துவக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.முதல் கட்டமாக நம் பாரம்பரியம், கலாசாரத்திற்கு சான்றாக உள்ள கோவில்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாட்ச்மேன்கள், துாய்மைப் பணியாளர்கள் உட்பட இதர பணியாளர்களை நியமித்து, குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்.

அதுவரை திருக்கோவில், 'டிவி' துவங்க மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, 'உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்' என்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X