கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜாமின் மனு பட்டியலிடுவதில் விதிமீறல்

Added : டிச 02, 2020
Share
Advertisement
மதுரை:ஜாமின் மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதில் விதிமீறல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கவும், சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், குருவினன்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிவேலு. ஒரு முதியவரை தாக்கியதில் இறந்ததாக, பழனிவேலு மீது, செம்பட்டிவிடுதி போலீசார் கொலை

மதுரை:ஜாமின் மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதில் விதிமீறல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கவும், சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், குருவினன்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிவேலு. ஒரு முதியவரை தாக்கியதில் இறந்ததாக, பழனிவேலு மீது, செம்பட்டிவிடுதி போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். பழனிவேலு ஜாமின் அனுமதிக்கக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு:

மனுதாரர் முதலில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒன்பதாவது நாளில், மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். ஒருமுறை மனு தள்ளுபடியானால், அடுத்தடுத்து வேறு நீதிமன்றத்தில் மனு செய்கின்றனர் என அரசு வழக்கறிஞர் கூறுகிறார்.ஒரு நீதிமன்றத்தில், ஒருவர் ஜாமின் மனு தாக்கல் செய்து தள்ளுபடியாகி, அவர் அடுத்தடுத்து ஜாமின் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், அதே நீதிமன்ற நீதிபதிக்கு முன் விசாரணைக்கு பட்டியலிட, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதனடிப்படையில் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இல்லையெனில் தலைமை நீதிபதி அல்லது சம்பந்தப்பட்ட நீதிபதியின் பரிந்துரைப்படி, வேறு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிட, உயர் நீதிமன்ற பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வழக்கில் பதிவுத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. இதை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாமின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X