பயங்கரவாதிகளின் சுரங்கப்பாதை ஆய்வு

Added : டிச 02, 2020
Share
Advertisement
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவிய லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் உருவாக்கிய சுரங்கப்பாதையை பி.எஸ்.எப்.அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் வழியாக அவர்கள் பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் துாரம் வரை சென்றனர்.ஜம்மு - காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை சோதனை சாவடியில் சமீபத்தில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேர் நம் பாதுகாப்புப்

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவிய லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் உருவாக்கிய சுரங்கப்பாதையை பி.எஸ்.எப்.அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் வழியாக அவர்கள் பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் துாரம் வரை சென்றனர்.

ஜம்மு - காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை சோதனை சாவடியில் சமீபத்தில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேர் நம் பாதுகாப்புப் படையினரால்சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதையடுத்து பயங்கரவாதிகள் ஊடுருவிய வழி குறித்து ஆய்வுசெய்ய இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர் பயங்கரவாதிகளின் அலைபேசிகளில் பதிவாகி இருந்த தகவல்கள் அடிப் படையில் ஜம்முவின்சம்பா மாவட்ட எல்லையில் ஒரு சுரங்கப்பாதையை கண்டறிந்தனர். இதன் வாயிலாக பாகிஸ்தானில் இருந்து சுரங்கம் அமைத்து சர்வதேச எல்லையை கடந்து பயங்கரவாதிகள் நாட்டிற்குள் ஊடுருவியது உறுதியானது.

இருப்பினும் சுரங்கப்பாதையின் மற்றொரு நுழைவாயில் எங்குள்ளது என ஆராய பி.எஸ்.எப். குழுவினர் அந்த சுரங்கப்பாதை வழியாக பாகிஸ்தான் எல்லைக்குள் 200 மீட்டர் துாரம் வரை சென்றனர்.பாகிஸ்தான் எல்லையில் இருந்த சுரங்கப்பாதை அமைப்புகளை ஆதாரங்களாக அவர்கள் 'வீடியோ' பதிவு செய்தனர்.இந்த சுரங்கப் பாதை சர்வதேச எல்லையில் இருந்து 160 மீட்டர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 60 மீட்டர் துாரத்தில் 25 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளதாக பி.எஸ்.எப். அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X