சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 10 ஆயிரத்து, 980 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 221 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 65 ஆயிரத்து, 58 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.அதில், சென்னையில், 380 பேர்; கோவையில், 141 பேர்; செங்கல்பட்டில், 86 பேர்; திருவள்ளூரில், 63 பேர்; சேலத்தில், 56 பேர் என, 1,404 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, 1.21 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், ஏழு லட்சத்து, 83 ஆயிரத்து, 319 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சிகிச்சை பெற்றவர்களில், நேற்று, 1,411 பேர் உட்பட, இதுவரை, ஏழு லட்சத்து, 60 ஆயிரத்து, 617 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது, சென்னையில், 3,702 பேர்; கோவையில், 935 பேர்; செங்கல்பட்டில், 552 பேர்; திருவள்ளூரில், 484 பேர்; சேலத்தில், 477 பேர் என, 10 ஆயிரத்து, 980 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.கொரோனா தொற்றால், நேற்று, 10 பேர் உட்பட, இதுவரை, 11 ஆயிரத்து, 722 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE