கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகள்

Added : டிச 02, 2020
Share
Advertisement
சென்னை:மாவட்ட நீதிபதிகள், 10 பேர், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதிகளாக, இவர்களை நியமித்து, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றும், ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்ரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்திகுமார் சுகுமார குருப், முரளிசங்கர்

சென்னை:மாவட்ட நீதிபதிகள், 10 பேர், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதிகளாக, இவர்களை நியமித்து, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றும், ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்ரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்திகுமார் சுகுமார குருப், முரளிசங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராமராஜு நல்லையா, தமிழ்ச்செல்வி ஆகியோரை, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, செப்டம்பரில், உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்தது.

தற்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக, 10 பேரையும் நியமித்து, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். புதிய நீதிபதிகள் விரைவில் பதவியேற்பர்.உயர் நீதிமன்றத்தில், தற்போது, 53 நீதிபதிகள் உள்ளனர். புதிதாக, 10 நீதிபதிகள் பதவியேற்கும்போது, எண்ணிக்கை, 63 ஆக உயரும். உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X