கண்ணாடி பாறைகள்
மத்திய சீனாவின், ஹெனான் மாகாணத்தில் லுயோயாங் நகரில், கடந்த ஒரு வாரமாக, பனி பொழிய தொடங்கியுள்ளது. இதனால், லாவோஜூன் மலைப்பகுதி பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. மரங்கள், ஏரிகள், என பல பகுதிகளிலும் பனி படர்ந்து காணப்படுவதால், சூரிய உதயமும், அஸ்தமனமும் காண்போர் கண்களுக்கு விருந்து படைக்கிறது. அதேபோல், கிழக்கு சீனாவின் கடற்பகுதியில் உள்ள பாறைகள் கண்ணாடி பாறைகள் போல் காட்சியளிக்கிறது. தற்போது, இதுதொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரமாண்ட கொம்புத்திருக்கை
புதுச்சேரியை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் மற்றும் அவரது குழுவினர் ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டனர். ஆழ்கடலில் திருக்கை மீன்கள் பயணிப்பதை கண்டு அழகாக படம் பிடித்தனர். அப்போது, பிரமாண்ட கொம்புத்திருக்கை மீன்கள் சென்றதை கண்டு ஆச்சரியமடைந்தனர். அந்த மீன்கள் ஒவ்வொன்றும், ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், புதுச்சேரி கடற்கரையில் திருக்கை மீன்கள் முதல் முறையாக தென்பட்டதாகவும் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
பூமியை நோக்கி வந்த விண்கல்
ஜப்பான் நாட்டில், கடந்த சில நாட்களுக்கு முன், வானில் இருந்து விண்கல் ஒன்று பிரகாசமாக எரிந்தபடி பூமியை நோக்கி விழுந்தது. திரளான மக்கள், இந்த காட்சியை கண்டு வியந்ததோடு, தங்களது மொபைல் போன்களிலும் வீடியோவாக பதிவு செய்து வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இந்த காட்சியை கண்டபோது, முழு நிலவு பூமிக்கு இறங்கி வருவதை போன்று இருந்ததாக வர்ணித்தும் உள்ளனர்.
அரிய வகை ஆமை மீட்பு
அமெரிக்காவில், மாசாசூசெட்ஸ் பகுதியில் உள்ள கேப் கோப் கடல் பகுதியில் பிரமாண்டமான ஆமை கரை ஒதுங்கியதை அடுத்து, உயிரியல் ஆய்வாளர்கள் அது தொடர்பாக ஆய்வு நடத்தினர். ஆய்வில் அந்த ஆமை, 'லாக்கர்ஹெட்' என்ற அரிய ஆமை என்பது தெரியவந்தது. 160 கிலோ எடை கொண்ட அந்த ஆமைக்கு கடும் குளிர் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, சிகிச்சை அளிப்பதற்காக அதை ஆய்வகத்துக்கு எடுத்து சென்றனர். தற்போது, இதுதொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE