கோவை:கோவை வேளாண் பல்கலையில், 2020-21 கல்வியாண்டிற்கான இளமறியவியல் பட்டப்படிப்பு, முதல் சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு சேர்க்கை நவ., 30ல் துவங்கியது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளான, 14 இடங்களுக்கான கலந்தாய்வில், 12 மாணவ மாணவியரும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐந்து சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில், 38 மாணவ மாணவியரும் பங்கேற்று, தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்தனர்.
பெற்றோர் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, தற்போதுள்ள பருவநிலையை கருத்தில் கொண்டு, நேற்று மாலை 5:00 மணியோடு நிறைவடைவதாக இருந்த, இணையதள கலந்தாய்வு டிச.,3 மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே விண்ணப்பித்த மாணவ, மாணவியர், தங்களது விருப்பபாடம் மற்றும் கல்லுாரித்தேர்வில் மீண்டும் மாற்றம் செய்ய விரும்பினால், இந்த காலநீட்டிப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என, கல்லுாரி முதல்வர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாண சுந்தரம் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE