பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., குழப்பங்களுக்கு தீர்வு எப்போது பிஸினஸ் நடந்தது அப்போது... நோட்டீஸ் வருகிறது இப்போது

Added : டிச 02, 2020
Share
Advertisement
தமிழகத்திலுள்ள நடுத்தர வர்த்தகர்களுக்கு சமீபகாலமாக மத்திய மாநில ஜி.எஸ்.டி. அதிகாரிகளால் அடுத்தடுத்து நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன. முதலில் மத்திய ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அனுப்பும் நோட்டீசைப் பற்றிப் பார்ப்போம்...நம் நாட்டைப் பொறுத்தவரை அதிக பட்ச விலை என்பது அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது தான். இதில் அந்தப் பொருளை உற்பத்தி செய்கிறவர் வினியோகஸ்தர் அல்லது மொத்த
ஜி.எஸ்.டி., குழப்பங்களுக்கு தீர்வு எப்போது பிஸினஸ் நடந்தது அப்போது... நோட்டீஸ் வருகிறது இப்போது

தமிழகத்திலுள்ள நடுத்தர வர்த்தகர்களுக்கு சமீபகாலமாக மத்திய மாநில ஜி.எஸ்.டி. அதிகாரிகளால் அடுத்தடுத்து நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன. முதலில் மத்திய ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அனுப்பும் நோட்டீசைப் பற்றிப் பார்ப்போம்...

நம் நாட்டைப் பொறுத்தவரை அதிக பட்ச விலை என்பது அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது தான். இதில் அந்தப் பொருளை உற்பத்தி செய்கிறவர் வினியோகஸ்தர் அல்லது மொத்த விற்பனையாளருக்கு வரியுடனே விற்பனை செய்கிறார். அவர்களிடமிருந்து சில்லரை விற்பனையாளருக்கு விற்கப்படும்போது வரியுடனே விலை வைக்கப்படுகிறது. சில்லரைக் கடைக்காரரிடமிருந்து வாடிக்கையாளருக்கும் பொருள் செல்கிறது.

இப்படிப் பல கைகளுக்கு பொருள் மாறினாலும் அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு யாரும் விற்பனை செய்வதில்லை. பேக்கிங்கில் குறிப்பிட்டதை விட அதிக விலைக்கு விற்பது குற்றமாகிறது.

ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டபோது வரி செலுத்துவோர் தங்களிடம் உள்ள இறுதி ஸ்டாக்கை ஜி.எஸ்.டி உடன் விற்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. அதன்படி மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய செலுத்தும் ஜி.எஸ்.டி. வரியில் (சி.ஜி.எஸ்.டி) கலால் தொகையில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை நமது சி.ஜி.எஸ்.டி. கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.

அதாவது ஒப்படைப்பு செய்யப்பட்ட இறுதி ஸ்டாக்கிற்கு நேரடியாக கலால் செலுத்திய பில்கள் இருந்தால் நமது சி.ஜி.எஸ்.டி. கணக்கில் 100 சதவீதம் வரவு வைத்துக்கொள்ளலாம். ஆனால் உற்பத்தியாளர்களால் கலால் வரி செலுத்தப்பட்டு நமது பில்களில் கலால் வரி இல்லாவிட்டாலும் ஜி.எஸ்.டி. வரி விகிதத்துக்கு ஏற்ப 40 சதவீதம் அல்லது 60 சதவீதம் கலால் தொகையை நமது சி.ஜி.எஸ்.டி. கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.

மாநில அரசின் ஜி.எஸ்.டி.யைப் பொறுத்தவரை எஸ்.ஜி.எஸ்.டி. 2017 ஜூன் 30 தேதிப்படி றையாக வாட் உள்ளீட்டு வரியைச் செலுத்தி 'ரிட்டர்ன்ஸ்' தாக்கல் செய்திருந்தால் அதை முழுமையாக எஸ்.ஜி.எஸ்.டி. கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம். இறுதி ஸ்டாக்கை விற்கும்போது நமது கணக்கில் இருக்கும் வரவு தொகை போக பாக்கி ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அல்லது மாநில அரசுக்கு செலுத்த வேண்டும்.

உதாரணமாக 2017 ஜூன் 30ல் வர்த்தகர் ஒருவர் இருப்பில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இறுதி ஸ்டாக்கிற்கு மதிப்புக் கூடுதல் வரியாக ஐந்து சதவீதம் செலுத்தி இருந்தால் புதிய முறைப்படி விற்கும்போது 12 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு தலா ஆறு சதவீதத்தொகை பகிரப்படும்.


விற்பனை மதிப்பு கூடவில்லை



இன்னும் விளக்கமாகச் சொல்வதெனில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான இறுதி ஸ்டாக்கிற்கு 5000 ரூபாய் வாட் வரியாகச் செலுத்தியிருக்க வேண்டும். அப்போது அதன் மொத்த விற்பனை மதிப்பு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக இருக்கும். ஆனால் ஜி.எஸ்.டி. 12 சதவீதமாகிவிடுவதால் பில் மதிப்பு 93 ஆயிரத்து 750 ரூபாயாகவும் இரு அரசுகளுக்குமான ஜி.எஸ்.டி. தலா ரூ.5625 (6 சதவீதம்) ஆகவும் கணக்கிடப்படும்.

இதில் மத்திய அரசுக்கான ஜி.எஸ்.டி.தொகையில் 40 சதவீதத் தொகையை அதாவது 2250 ரூபாயை வர்த்தகர் திரும்பப் பெற முடியும். ஆக மத்திய அரசுக்கான ஜி.எஸ்.டி. 3375 ரூபாய் மட்டுமே செலுத்தப்படும். மாநில அரசுக்குச் செலுத்திய ஜி.எஸ்.டி.தொகை 5625 ரூபாயில் உள்ளீட்டு வாட் வரித்தொகை 5000 ரூபாய் போக 625 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் ஜி.எஸ்.டி.க்கு முன்பும் பின்பும் விற்பனை மதிப்பு எந்தவிதத்திலும் கூடவில்லை. அதன் பலன் வர்த்தகர்களுக்கும் முழுமையாகச் சென்றடைகிறது. இதில் எந்த வர்த்தகருக்கும் இறுதி ஸ்டாக்கை அதிகரித்துக் காட்டவோ அதற்குரிய வெளியீட்டு வரியைக் (output tax)
கூடுதலாகச் செலுத்தவோ தேவையே இல்லை. அதன் அடிப்படையில் தொகையை திரும்ப கோரும் (abatement claim) அவசியமும் இல்லை.

ஏனெனில் இறுதி ஸ்டாக் அதிகம் காண்பித்து மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி. கணக்கில் அதிகம் வரவு வைத்து கொண்டால் அதை விற்கும்போது வெளியீட்டு வரி கட்டியே ஆக வேண்டும். வருமான வரிக்கும் பதில் சொல்ல வேண்டும். பலனே இல்லாமல் எந்த வியாபாரியும் இதை செய்ய
மாட்டார்.


வர்த்தகர்களுக்கு நோட்டீஸ்

உண்மை நிலை இப்படியிருக்க மத்திய அரசின் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக 2017ம் ஆண்டில் இறுதி ஸ்டாக்கிற்கு வரி செலுத்தி தொகையை திரும்பகோரிய வர்த்தகர்களை குறி வைத்து நோட்டீஸ் அனுப்பி வதைத்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் அன்றாட
வாழ்விற்குத் தேவையான ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களை வினியோகிக்கும்
வர்த்தகர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்தும் உற்பத்தியாளர்களிடமிருந்தும் இந்தபொருட்களை கொள்முதல் செய்து சில்லரைக் கடைக்காரர்கள் மூலமாக மக்களுக்கு
வினியோகித்து வருகின்றனர்.இந்தப் பொருட்களுக்கான கலால் வரியைச் செலுத்திய பின்பே இவை சந்தைக்கு வருகின்றன. ஆனால் ஒவ்வொரு கொள்முதலுக்குமான பில்களையும்
இப்போது கேட்டு இம்சிக்கின்றனர் அதிகாரிகள்.

ஏறத்தாழ 1500 விதமான பொருட்களுக்கும் கொள்முதல் பில்களையும் விற்பனை பில்களையும் மூன்று ஆண்டுகளுக்குப் பின் சமர்ப்பிக்க வேண்டுமென்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இதை எந்த வடிவில் ஒப்படைப்பு செய்வது என்பது பற்றியும் எந்தத் தெளிவான
அறிவுறுத்தலையும் தருவதில்லை.

அப்போதைய கொள்முதலுக்கும் விற்பனைக்குமான பில்களை இப்போது சமர்ப்பிக்க
வாய்ப்பில்லை என்று வர்த்தகர்கள் விளக்கினாலும் ஏற்றுக்கொள்வதில்லை. அப்போதிருந்த ஸ்டாக்கிற்கு 'வாட்' வரி செலுத்தியதற்கான மாதிரி பில்களை இவர்கள் காண்பித்தாலும்
அதையும் பொருட்படுத்துவதில்லை.மத்திய அரசின் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் செய்யும் சித்ரவதை இப்படியென்றால் மாநில அரசின் வணிகவரித்துறை (ஜி.எஸ்.டி.) அதிகாரிகள் கொடுக்கும் கொடுமை 'வேற லெவல்' ரகம்.
- நாளை--
-நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X