என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது.... உயிரும், உள்ளமும் சென்னை
போராட்டக்களத்தில் தான்உள்ளன.
ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்
வழக்கொழிந்துபோன, யாருமே பேசாத, யாருக்கும் தாய்மொழியாக இல்லாத
சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
சீமான்,
நாம் தமிழர் தலைமைஒருங்கிணைப்பாளர்
கல்வி - வேலைகள் மட்டுமல்ல, அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் பங்கிட்டுத் தரப்பட வேண்டும். வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு புதிய தமிழகம் தார்மீக ஆதரவு.
100% இடஒதுக்கீட்டு கடைபிடிக்க வேண்டுமென்று 13 ஆண்டுகளுக்கு முன்பே
வலியுறுத்திருக்கிறோம். இதை அமலாக்கினால் ஓ.சி., / பி.சி., / எம்.பி.சி., / எஸ்.சி., என்ற
பிரிவினைகள் முற்றாக ஒழிந்து போகும். இதன் அடிப்படையில் தான் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை வலியுறுத்திவருகிறோம்.
கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் தலைவர்
சரியான முன்னெச்சரிக்கை மற்றும் திட்டமிடலால் இயற்கையின் சீற்றத்தைக் கடந்துசெல்லும் சரியான பாதுகாப்பு நெறிமுறைகளை அரசு ஏற்படுத்தி மக்களுக்கு
முன்னெச்சரிக்கையாக அறிவித்துள்ளது, அதன்படி தவறாமல் கடைப் பிடித்து பல்வேறு
இழப்பில் இருந்து நம்மை, நாம் காத்துக்கொள்ள வேண்டும்.
வாசன்,
த.மா.கா., தலைவர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE