அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: நன்றி மறவாதீர் காங்கிரசாரே!

Updated : டிச 03, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.சுப்பு, திருத்தங்கல், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக காங்கிரஸ் கட்சியின், மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ், 'வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்; தொகுதி பங்கீடு தொடர்பாக, பேரம் எதுவும் பேச மாட்டோம்' என,
Congress, DMK, Dinesh Gundu Rao, காங்கிரஸ், திமுக


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ஆர்.சுப்பு, திருத்தங்கல், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக காங்கிரஸ் கட்சியின், மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ், 'வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்; தொகுதி பங்கீடு தொடர்பாக, பேரம் எதுவும் பேச மாட்டோம்' என, தெரிவித்துள்ளார்.

இது, தமிழகத்திலுள்ள காங்கிரசின் மூத்த தலைவர் முதல், கடைசி தொண்டர் வரை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், 2019-ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில், 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றதே ஆகும். இதனால், வரும் சட்டசபை தேர்தலிலும், அதிக தொகுதிகளில் போட்டியிட, காங்கிரஸ் நினைப்பது தவறான நிலைப்பாடாகும்.


latest tamil news


கடந்த லோக்சபா தேர்தலில், 'ராகுல், பிரதமராக வர வேண்டும்' என, முதலில் குரல் கொடுத்தவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான் என்பதை, காங்கிரசார் மறந்திருக்க மாட்டார்கள். இதை நிறைவேற்றவே, காங்கிரசுக்கு அதிக சீட்டுகளை கொடுத்து, அவர்களை வெற்றி பெறச் செய்தது, தி.மு.க., என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழகத்தில் கிடைத்த வெற்றியால் தான், காங்கிரஸ் கட்சியின் குரல், பார்லிமென்டில் ஓரளவிற்கு ஒலிக்கிறது என்பது, மூத்த தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். தமிழக காங்கிரசார் இதை எல்லாம் மறந்து, தினேஷ் குண்டுராவை குற்றம் சொல்லக் கூடாது. செய்த நன்றியை மறக்காமல், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு, தி.மு.க.,வின் வெற்றிக்காக பாடுபடுவதே, தமிழக காங்கிரசாரின் கடமையாகும்!

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
02-டிச-202020:45:18 IST Report Abuse
Rajagopal 1967 ல் காங்கிரஸைத் தோற்கடிக்க, திமுக பல கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து வென்றது. அப்போது ராமசாமி நாயக்கர் திமுகவிற்கு எதிராக இயங்கினார். இப்போது அதே காங்கிரஸ் திமுகவின் தலைப்பைப் பிடித்துக் கொண்டு, ராமசாமி நாயக்கர் பிம்பத்திற்கு ஆதரவு அளித்துத் தேர்தலில் போட்டியிடுகிறது. அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க.
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
02-டிச-202018:29:13 IST Report Abuse
S.kausalya காங்கிரஸின் உதவியால்,minority MLA க்களை கொண்டு இருந்த கருணாநிதி ஆட்சி செய்த பொழுது, ஒரு மந்திரி கூட காங்கிரசுக்கு கொடுக்க மனம் வரவில்லை. இவர்களும் சொரணை கெட்டு ஆதரவு தந்து கொண்டு இருந்தார்கள். ஆனால் மத்தியில் திமுக ஆதரவு தர வேண்டுமானால் இந்த இந்த துறை இவர்களுக்கு கொடுத்தே தீர வேண்டுமென வற்புறுத்தி பெற்றார்கள். அவர்களும் அப்படியே கொடுத்தார்கள்.இதை விட நன்றியுடன் நடந்து கொள்வதாக இருந்தால் முறை வாசல் செய்ய வேண்டியது தான்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-202016:56:59 IST Report Abuse
J.V. Iyer தமிழகத்தில் ராகுல்ஜியை முதல்வராக்க சுடலை சார் ஒத்துக்கொண்டால், எல்லோரும் காங்கிரஸுக்கு வோட்டு போடுவார்கள். அடுத்த தமிழக முதல்வர் வேட்பாளர் பாப்பு ராகுல்ஜி வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X