புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் ஆன்லைன் மூலம் நாடக விழா நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழகம், நிகழ்கலை துறை, புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டு துறை மற்றும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் இணைந்து, ஆன்லைன் நாடக விழா, கடந்த 23 முதல் 27 ம் தேதி வரை 5 நாட்கள் நடந்தது.இதில் 27 நாடக குழுவைச் சேர்ந்த 300 கலைஞர்கள் கலந்து கொண்டு, 27 நாடகங்களை ஆன்லைன் வழியில் அரங்கேற்றினர். இதற்காக, நாடக குழுக்களுக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது.
புதுச்சேரி கலை பண்பாட்டு துறை இயக்குநர் ராகினி, நாடக விழாவை துவக்கி வைத்தார். டீன் ஸ்ரீதரன், நாடக விழா, கலை மற்றும் கலைஞர்களின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.நிகழ்கலைத்துறை தலைவர் ராஜ ரவிவர்மன், துறையின் பல்வேறு நடவடிக்கைகளை தெரிவித்து, நன்றி கூறினார். நிகழ்ச்சியில், முருகவேல், பாலசுப்ரமணியன், இளம்பருதி, சந்தோஷ், கந்தநாதன், சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE