கோர்க்காடு கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்

Added : டிச 02, 2020
Share
Advertisement
வில்லியனுார் : கோர்க்காடு கிராம மக்கள் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஏம்பலம் தொகுதியை சேர்ந்த கோர்க்காடு பேட் புதுநகர் பள்ளத் தெருவில் கடந்த சில வாரங்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் முறையிட்டும்

வில்லியனுார் : கோர்க்காடு கிராம மக்கள் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏம்பலம் தொகுதியை சேர்ந்த கோர்க்காடு பேட் புதுநகர் பள்ளத் தெருவில் கடந்த சில வாரங்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 10:30 மணியளவில் வில்லியனுார்-கரிக்கலாம்பாக்கம் சாலை கோர்க்காடு சந்திப்பில் 20 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கரிக்கலாம்பாக்கம் போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையர் மனோகர், உதவிப் பொறியாளர் கருத்தையன் உள்ளிட்டோர் கோர்க்காடு, பள்ளத்தெருவில் பழுதடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து கொடுத்தனர்.தொடர்ந்து மின்துறை இளநிலை பொறியாளர் பக்கிரிசாமி கிராமத்தை ஆய்வு செய்து தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X