பொது செய்தி

இந்தியா

பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா

Added : டிச 02, 2020
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் சைல்டு லைன் சார்பில் இணைய வழியில் நடந்த பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அர்ஜீன்சர்மா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.காரைக்கால் மாவட்ட சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு 'பாதுகாப்பான தீபாவளி' என்று தலைப்பில் பேச்சுப்போட்டியும், 'மகிழ்ச்சியான உலகம்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி

காரைக்கால் : காரைக்காலில் சைல்டு லைன் சார்பில் இணைய வழியில் நடந்த பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அர்ஜீன்சர்மா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

காரைக்கால் மாவட்ட சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு 'பாதுகாப்பான தீபாவளி' என்று தலைப்பில் பேச்சுப்போட்டியும், 'மகிழ்ச்சியான உலகம்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை இணைய தளம் மூலம் போட்டி நடைபெற்றது.போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கல்வித்துறை துணை இயக்குநர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கலெக்டர் அரஜூன்சர்மா தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் சைல்டுலைன் மைய ஒருங்கிணைப்பாளர் விமலா, உறுப்பினர்கள் நர்மதா, அகிலா புஷ்பநாதன், மரியதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X