பாகூர் : பிள்ளையார்குப்பம் சாலையில், கழிவு நீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ள சாலையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்வதற்கான வடிகால் வசதி முறையாக இல்லை.அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாலையில் பாய்ந்து சென்று தாழ்வாக உள்ள பகுதியில் தேங்கி நிற்கிறது.
இதனால், அப்பகுதி மக்களும், அவ்வழியாக சென்று வரும் பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசு உற்பத்தி அதிகரித்து பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவு நீர் வெளியேற்றுவது தொடர்பாக, அப்பகுதி மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், பிள்ளையார்குப்பம் சாலையில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE