சென்னை: கட்சி துவக்கம் குறித்து, மக்கள் மன்ற நிர்வாகியுடன், ரஜினி நேற்றும்(டிச.,1) ஆலோசனை நடத்தினார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வரும் ரஜினி, அடுத்த மாதம் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு, அனைவரிடமும் எழுந்துள்ளது. சென்னையில், நேற்று முன்தினம், மாவட்ட செயலர்களை அழைத்து, இது தொடர்பாக ஆலோசித்தார். மக்கள் மன்றத்தில், சரியாக செயல்படாதோரை கண்டித்தார்.

அவர்களிடம் பேசிய ரஜினி, 'கட்சி அறிவிப்பையும், கூட்டணி தொடர்பான விஷயங்களையும், விரைவில் அறிவிப்பேன்' என்றார். முடிவு எதுவாக இருந்தாலும், அதை நிர்வாகிகள் ஏற்க தயாராகி விட்டனர்.
இந்நிலையில், நேற்று சென்னை, போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டில், மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரை அழைத்து, ரஜினி பேசினார். இதையடுத்து, மக்கள் மன்றத்தில் களையெடுப்பும், கட்சி குறித்த அறிவிப்பும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE