பொது செய்தி

இந்தியா

குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.ஆண்டு தோறும் ஜன., 26ல், நம் நாட்டின் குடியரசு தின விழா, டில்லியில் கோலாகலமாக நடக்கும். ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில், ஜனாதிபதி மாளிகையிலிருந்து, இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில், முப்படை
Boris Johnson, Republic Day, Chief Guest

புதுடில்லி: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டு தோறும் ஜன., 26ல், நம் நாட்டின் குடியரசு தின விழா, டில்லியில் கோலாகலமாக நடக்கும். ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில், ஜனாதிபதி மாளிகையிலிருந்து, இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில், முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடக்கும். பல்வேறு மாநிலத்தவரும், அவர்களது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமான கலை நிகழ்ச்சிகளை நடத்துவர். மாணவ - மாணவியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடக்கும்.

விமானப்படையினரும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்துவர். நம் குடியரசு தின விழாவில், ஆண்டு தோறும் சிறப்பு விருந்தினர் பங்கேற்பது வழக்கம். இதன்படி, கடந்த குடியரசு தின விழாவில், தென்ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, அடுத்த மாதம் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகளில், 50 சதவீதம் குறைக்கப்படும் என,தெரிகிறது. பள்ளி மாணவர்களும் குறைந்த அளவிலேயே பங்கேற்கஉள்ளனர்.


latest tamil newsஆனாலும், நம் ராணுவத்தில் புதிதாக இணைந்துள்ள ரபேல் போர் விமானங்கள், குடியரசு தின விழாவில் முக்கிய பங்காற்ற உள்ளன. அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
02-டிச-202023:14:18 IST Report Abuse
Vijay D Ratnam அப்ப ஃப்ரான்ஸ்லேர்ந்து ரஃபேல் வந்தது குடியரசு, சுதந்திர தினத்துக்கு ஊர்வலம் உடுறதுக்கும், ஆயுத பூஜைக்கு படையல் போட்டு பொறி, வெல்லம், பொட்டுக்கடலை, சுண்டல் திங்கறதுக்குத்தானா. இந்தா ரஃபேல் வந்துடுச்சி,அந்தா அடிக்கப்போறோம். இப்புடி அடிக்க போறோம் அப்டி அடிக்கப்போறோம். அவன்கிட்ட அத்தனை பீரங்கி இருக்கு, நம்மகிட்ட இத்தனை பீரங்கி இருக்கு, இனி சீனா அவ்ளோதான், சின்னப்பின்னம் ஆகப்போகிறது என்று BBC, CNN, தொடங்கி இங்குட்டு ஆட்டையாம்பட்டி கேபிள் டிவி வரைக்கும் சொல்லிக்கிட்டே இருந்தாய்ங்க, இப்ப பத்து நாளா அதுவும் இல்லை. இந்த பக்கத்துல இருக்குற சொத்தப்பசங்க புடிச்சி வச்சிக்கிற ஆக்குபைடு காஷ்மீரையாவது மீட்டெடுங்கப்பா. துருப்பிடித்து அழிவதை விட தேய்ந்து அழிவதுதான் கத்திக்கு பெருமை என்று எதோ ஒரு மஹான் சொல்லியிருக்காருப்பா. அது சரி வேலையில்லாத வெட்டிப்பசங்க எதுனாச்சுக்கும் பெனாத்துவாய்ங்க. கொரோனாவுக்கு காரணம் மெடிக்கல் மாஃபியா, லடாக் அக்கப்போருக்கு காரணம் ஆயுத பிசினெஸ், ட்ரம்ப் தோல்விக்கு காரணம் சி ஜிங் பிங், நிதிஷ்குமார் வீழ்ச்சிக்கு காரணம் பஸ்வான் புள்ளாண்டான் என்று.
Rate this:
Cancel
Anand - madurai,இந்தியா
02-டிச-202015:24:59 IST Report Abuse
Anand வருக போரிஸ் ஜான்சன் திறமையான மனிதர்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-டிச-202010:30:18 IST Report Abuse
Malick Raja அப்பூடியா சங்கதி.....கொரோனாவா போயிடுச்சு .. போனமாதிரி தெரியுது .. அப்பூடியா தெரியுது .. பார்க்கலாம் பொறுத்திருந்து .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X