சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான்

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: சீனாவுக்கும் இந்தியாவுக்குமான மோதல் போக்கு உச்சத்தில் உள்ள நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் தங்கள் ராணுவ உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.சீன பாதுகாப்பு அமைச்சரும், அந்நாட்டு ராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேபாள நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு
China, Pakistan, MilitaryDeal, Sign, India, ராணுவ ஒப்பந்தம், சீனா, பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: சீனாவுக்கும் இந்தியாவுக்குமான மோதல் போக்கு உச்சத்தில் உள்ள நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் தங்கள் ராணுவ உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சீன பாதுகாப்பு அமைச்சரும், அந்நாட்டு ராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேபாள நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பாக்., வந்தவர் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை சந்தித்தார். முன்னதாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை பார்வையிட்டார். அந்நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவுடன் சந்திப்பு நடத்தினார். இருவரும் கூட்டாக புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


latest tamil news


இது தொடர்பாக சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சர்வதேச மற்றும் பிராந்திய சூழல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. இரு நாடுகள் மற்றும் ராணுவங்களுக்கு இடையிலான உறவுகள், தொழில்நுட்ப மற்றும் உபகரணங்கள் சார்ந்த ஒத்துழைப்பு, பிற பிரச்னைகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். பாகிஸ்தானின் ராணுவ திறனை கட்டமைக்கும் வகையில் இந்த பயணம் அமைந்தது. சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். என தெரிவித்துள்ளது. ஒப்பந்தங்களில் உள்ள தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-டிச-202000:40:17 IST Report Abuse
Rajagopal வெள்ளைக்காரன் நம்மை எப்படி ஆண்டான் என்பதை அறிய வேண்டுமானால், பாகிஸ்தான் சீனாவிடம் தலையைக் கொடுத்திருப்பதை பார்த்துக் கொள்ளவும். இப்படித்தான் பல அரசர்கள் தங்களது எதிரிகளை வீழ்த்த வெள்ளைக்காரனோடு இணைபிரியா ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பிறகு இங்கிலீஸ்காரன் அவர்களையும் விழுங்கி விட்டான்.
Rate this:
Cancel
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
02-டிச-202014:37:35 IST Report Abuse
Rajan தீயமுக அல்லக்கைஸ் பெயர் இல்லாமல் திரிவது ஏன்?
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
02-டிச-202014:17:53 IST Report Abuse
Hari சோனியா ,ராகுல் இருவருடன் சீனா இரண்டாயிரத்தி எட்டில் ஒரு ரகசியஒப்பந்தம் போடீர்கள் அது என்ன என வெளியிடடால் நல்லா இருக்கும் செய்வீர்களா. அதே மாதிரியான ஒப்பந்தமா இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X