இஸ்லாமாபாத்: சீனாவுக்கும் இந்தியாவுக்குமான மோதல் போக்கு உச்சத்தில் உள்ள நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் தங்கள் ராணுவ உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சீன பாதுகாப்பு அமைச்சரும், அந்நாட்டு ராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேபாள நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பாக்., வந்தவர் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை சந்தித்தார். முன்னதாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை பார்வையிட்டார். அந்நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவுடன் சந்திப்பு நடத்தினார். இருவரும் கூட்டாக புதிய ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது தொடர்பாக சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சர்வதேச மற்றும் பிராந்திய சூழல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. இரு நாடுகள் மற்றும் ராணுவங்களுக்கு இடையிலான உறவுகள், தொழில்நுட்ப மற்றும் உபகரணங்கள் சார்ந்த ஒத்துழைப்பு, பிற பிரச்னைகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். பாகிஸ்தானின் ராணுவ திறனை கட்டமைக்கும் வகையில் இந்த பயணம் அமைந்தது. சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். என தெரிவித்துள்ளது. ஒப்பந்தங்களில் உள்ள தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE