பொது செய்தி

தமிழ்நாடு

"தந்தை கருணாநிதியின் பழைய அறிக்கையை கையில் வைத்து படித்தாரோ..."

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: மத்திய அரசுக்கு அடிபணிந்து, கை கட்டி, வாய்பொத்தி முதல்வர் இ.பி.எஸ்., இருப்பார் என்றால், தி.மு.க., வேடிக்கை பார்க்காது. விவசாயிகள், சிறுபான்மையினரை அடகு வைப்பீர்கள். தமிழையும், தமிழகத்தையும் அடமானம் வைப்பீர்கள். தன்மானமும், இனமானமும் இழந்து, இந்த அடமான காட்சிகளை வேடிக்கை பார்க்க, நாங்கள் ஏமாந்த சோணகிரிகள் அல்ல. ஒரு கையால் எதிரிகளின் பகை முடிப்போம்; மறுகையால்,
பேச்சு_பேட்டி_அறிக்கை, திமுக, ஸ்டாலின், உதயநிதி, DMK, Stalin,

சென்னை: மத்திய அரசுக்கு அடிபணிந்து, கை கட்டி, வாய்பொத்தி முதல்வர் இ.பி.எஸ்., இருப்பார் என்றால், தி.மு.க., வேடிக்கை பார்க்காது. விவசாயிகள், சிறுபான்மையினரை அடகு வைப்பீர்கள். தமிழையும், தமிழகத்தையும் அடமானம் வைப்பீர்கள். தன்மானமும், இனமானமும் இழந்து, இந்த அடமான காட்சிகளை வேடிக்கை பார்க்க, நாங்கள் ஏமாந்த சோணகிரிகள் அல்ல. ஒரு கையால் எதிரிகளின் பகை முடிப்போம்; மறுகையால், தமிழினத்துக்கு வாழ்வளிப்போம்; வெற்றி பெறுவோம்.
- தி.மு.க., தலைவர் ஸ்டாலின்


'தன் தந்தை கருணாநிதியின் பழைய அறிக்கையை கையில் வைத்து படித்தாரோ' என எண்ண தோன்றும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆவேச பேச்சு.

முன்னாள் படை வீரர்களுக்கு தமிழகத்தில், 30 லட்சம் ஓட்டுகள் உள்ளன. எனவே, நாங்கள் பாரதிய முன்னாள் படைவீரர் எழுச்சி பேரவை என்ற கட்சியை துவங்குகிறோம். எங்கள் கட்சியை மதித்து, கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சியுடன் கூட்டணி வைப்போம்.
- துணை ராணுவப்படை வீரர்கள் சங்க மாநில தலைவர் சுரேஷ்பாபு


விழுந்து விழுந்து விலா நோக சிரிக்க தோன்றும் வகையில், முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் சங்க மாநில தலைவர் சுரேஷ்பாபு பேட்டி.


latest tamil news


நான் பிரசாரம் செய்யும் இடங்களில், பொதுமக்கள் அதிக அளவில் கூடி, வரவேற்பு அளிக்கின்றனர். இதன் மூலம், அவர்கள், ஆட்சி மாற்றத்தை விரும்புவது தெரியவருகிறது. மத்திய அரசு, ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை, புதிய கல்விக் கொள்கை வாயிலாக திணிக்க பார்க்கிறது.
- தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி


'நம்ம ஊர் மக்கள், சினிமாவுல ஒரு சில சீன்கள் வர்ற நடிகர்களையே, 'ஆ...'ன்னு வாயை பிளந்துட்டு பார்ப்பாங்க... இந்த உண்மை தெரியாம, மனப்பால் குடிக்கிறாரே...' என்பது போல, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி.

ஊரடங்கு கட்டுப்பாடுகளில், முதல்வர் மீண்டும் தளர்வை அறிவித்திருப்பது, மகிழ்ச்சிக்குரியது. மெரினா கடற்கரை, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதித்து இருப்பது போல், குற்றால நீர்வீழ்ச்சியிலும் அனுமதிக்க வேண்டும். சென்னை, வானகரத்தில், தற்காலிகமாக இயங்கி வரும் பூ மார்க்கெட்டை, உடனே கோயம்பேடு வணிக வளாகத்திற்கு மாற்ற வேண்டும்.
- தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா


'கோயம்பேடு மார்க்கெட்டால், கொரோனா பரவி, சென்னை பட்ட பாட்டை மறந்தவர் போல' தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை.

கொரோனா காலத்தில், சில திரைப்படங்கள் ஓ.டி.டி., தளத்தில் வெளியிடப்பட்டன. இது, தற்காலிகமானதாக இருக்க வேண்டுமே தவிர, நிரந்தரமானதாக இருக்கக் கூடாது. திரையரங்குகள் திறக்கும் போது, திரையரங்கில் தான் படங்களை வெளியிட வேண்டும். தற்போது, திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன.
- தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜு


'தியேட்டர்கள்ல குடும்பத்தோடு போய் படம் பார்க்கணும்னா, பேங்க்ல லோன் வாங்குற அளவுக்கு கட்டணம் வச்சிருக்கிறது தெரியாதவர் போல' தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜு பேட்டி.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
02-டிச-202021:34:37 IST Report Abuse
unmaitamil சினிமாவுக்கு போறதுக்கு மொதல்ல பேங்க்ல கடன் வாங்கணும். போயிட்டு வந்த பிறகு கோரோனா சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கணும் அல்லது இருக்க சொத்தை விற்று வைய்த்தியம் பார்க்கணும். இது தேவையா ???? மக்கள் ஆலோசிக்க வேண்டும். சினிமாவால் நடிகனுக்கு மட்டுமே நன்மை. பொது மக்களுக்கு நமக்கு தொல்லையே.
Rate this:
Cancel
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
02-டிச-202018:24:15 IST Report Abuse
Suresh Ulaganathan ஏன் ஜெயலலிதாவும் எழுதி தான் படித்தார். அவரை விமர்சனம் செய்ய வில்லையா ?
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
02-டிச-202019:27:55 IST Report Abuse
KavikumarRamஅதையாவது தப்பில்லாம படிச்சார். உங்காளு சுடலை மாதிரி அவர் உளறிக்கொட்டவில்லை....
Rate this:
Cancel
oliver - karimun,இந்தோனேசியா
02-டிச-202018:15:11 IST Report Abuse
oliver தமிழ்த் தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியைத் திணிப்பதா?- மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X