'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்'

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020
Share
Advertisement
ஜெனீவா: தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், மலேரியா நோயை கட்டுப்படுத்துவதில், இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக, உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், 2000ம் ஆண்டு நிலவரப்படி, கொசுவால் உண்டாகும் மலேரியா நோயால், 2.30 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்; இது, 2019ல், 73 சதவீதம் குறைந்து, 63 லட்சமாக
India, Malaria, ImpressiveGains, WHO, உலக சுகாதார நிறுவனம், மலேரியா, இந்தியா, பாராட்டு

ஜெனீவா: தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், மலேரியா நோயை கட்டுப்படுத்துவதில், இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக, உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், 2000ம் ஆண்டு நிலவரப்படி, கொசுவால் உண்டாகும் மலேரியா நோயால், 2.30 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்; இது, 2019ல், 73 சதவீதம் குறைந்து, 63 லட்சமாக சரிவடைந்துள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு, இந்தியாவில் மலேரியா பாதிப்பு வெகுவாக குறைந்தது தான் காரணம். அதுமட்டுமின்றி, மலேரியாவில் ஏற்படும் உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது.


latest tamil news


இந்தியாவில், 2000ல், மலேரியா பாதிப்பால், 29 ஆயிரத்து, 500 பேர் உயிரிழந்துள்ளனர். இது, 2019ல், 7,700 ஆக குறைந்துள்ளது. இதே காலத்தில், இந்தியாவில் மலேரியா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு, முறையே, 18 மற்றும் 20 சதவீதம் சரிவடைந்துள்ளது. உலகில், ஆண்டுக்கு, 22.90 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு, மலேரியா தாக்கி, நான்கு லட்சத்து, 9.000 பேர் உயிரிழந்துள்ளனர். பர்கினா பசோ, கேமரூன், காங்கோ, கானா, இந்தியா, மாலி, மொசாம்பிக், நைகர், நைஜீரியா, உகாண்டா, டான்சானியா ஆகிய, 11 நாடுகளில், மலேரியா பாதிப்பு அதிகம் உள்ளது.

சர்வதேச மலேரியா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில், இந்நாடுகளின் பங்கு, முறையே, 70 மற்றும் 71 சதவீதமாக உள்ளது. உலக நாடுகள், மலேரியா ஒழிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, உயிரிழப்பை தடுக்க புதிய வழிமுறைகளை கையாள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X