பொது செய்தி

இந்தியா

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி அரசு பேசவில்லை: சுகாதாரத்துறை செயலர்

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி ஒருபோதும் அரசு பேசவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் 3 தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. மேலும், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட
Government, NeverSpoke, Vaccinating, EntireCountry, HealthSecretary, மத்திய சுகாதாரத்துறை செயலாளர், ராஜேஷ் பூஷன், கொரோனா, தடுப்பூசி, இந்தியா, மக்கள்

புதுடில்லி: ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி ஒருபோதும் அரசு பேசவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் 3 தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. மேலும், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தடுப்பு மருந்தை வாங்குவது தொடர்பாகவும் இந்திய அரசு பேசி வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதலில் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக அரசு ஒரு முன்னுரிமை பட்டியலை வெளியிட்டிருந்தது.

அதில் சுமார் 1 கோடி சுகாதார பணியாளர்கள், போலீஸ் மற்றும் ஆயுதப்படை வீரர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் உள்ள அனைவருக்கும் எப்போது கொரோனா தடுப்பூசி போடப்படும்? என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ராஜேஷ் பூஷன், 'ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,' என்றார்.


latest tamil news
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா கூறுகையில், 'கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம், வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதுதான். கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க அரசு விரும்புகிறது. வைரஸ் பரவும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்து, பரவல் சங்கிலியை உடைக்க முடிந்தால், ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இருக்காது,' எனக்கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
02-டிச-202022:30:40 IST Report Abuse
J.Isaac அனைவருக்கும் வேண்டாம். முதலில் இதை கண்டுபிடித்தவருக்கும், அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கும், பிறகு மக்களின் நலனுக்காக உழைக்கிற சவுக்கிதாருக்கும் ஜனாதிபதிக்கும், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மத்திய மாநில அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் உபயோகியுங்கள்.
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
02-டிச-202021:50:45 IST Report Abuse
Arul Narayanan All of you please note that the officer has not used the word free. He says all will not be given. Kodukkappadubavarhalukku free.
Rate this:
Cancel
02-டிச-202020:22:49 IST Report Abuse
ஆப்பு இவுரு சொன்னதுக்கு எதிர்ப்பு வலுத்தா இவரோட சொந்தக் கருத்துன்னு சொல்லிட்டு இவரை தூக்கிடுவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X