நியூயார்க்: கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு போன்றவற்றால், பல நாடுகளில், பெண் கடத்தல், வீடுகளில் பெண்கள் மீதான வன்முறை போன்றவை அதிகரித்துள்ளதாக, நோபல் பரிசு பெற்ற, நதியா முராத் தெரிவித்துள்ளார். ஈராக்கில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளால், பாலியல் கொடுமைக்கு ஆளாகி, தன் தாய் மற்றும் ஆறு சகோதரர்களை துப்பாக்கிச் சூட்டில் இழந்தவர், நதியா முராத். ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற இவர், மகளிர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டதற்காக, நோபல் பரிசு பெற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE