பொது செய்தி

இந்தியா

தொடரும் விவசாயிகள் போராட்டம்: அமித்ஷா மீண்டும் ஆலோசனை

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடனான நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், 7வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் தொடரும் நிலையில், நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஆலோசனை நடத்தினார்.வேளாண் சட்டங்களை எதிர்த்து
விவசாயிகள், போராட்டம், டில்லி, பஞ்சாப், அமித்ஷா, தோமர், கோயல், ஆலோசனை

புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடனான நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், 7வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் தொடரும் நிலையில், நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‛டில்லி சலோ' என்ற பெயரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஹரியானா - டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 35 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சின்போது, விவசாயிகள் குறிப்பிடும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட 5 பேர் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால், அதை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்கவில்லை. கடந்த காலங்களில், அமைக்கப்பட்ட குழுக்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தீர்வை தரவில்லை என தெரிவித்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.


latest tamil news



தொடர்ந்து, மூன்று மணி நேரம் நடந்த பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, நாளை(டிச.,3) மீண்டும் பேச்சைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சிக்கலான அம்சங்கள் மற்றும் பிரச்னைகளை மட்டும் அடையாளம் கண்டு நாளைக்குள் தெரிவியுங்கள். இது தொடர்பாக நாளை நடக்கும் 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஆலோசனை செய்யப்படும் என விவசாய சங்கங்களை மத்திய அரசு கேட்டு கொண்டது.
பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததை தொடர்ந்து 7 வது நாளாக விவசாயிகளின் போராட்டம் 7 வது நாளாக இன்றும் தொடர்ந்தது.


ஆலோசனை

இந்நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படாததை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். அப்போது ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலும் உடனிருந்தார். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-202017:33:37 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) சட்டத்தின் பலன் போக போகத்தான் தெரியும் ஆனால் திட்டமிட்டு போராடுகிறார்கள் விவசாயிகளின் பெயரில் உண்மை நிலவரம் தெரியவேண்டும்.
Rate this:
Cancel
03-டிச-202017:32:18 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) போராடுவது உண்மையில் இடைத் தரகர்கர்களா விவசாய்களா ?
Rate this:
Cancel
02-டிச-202021:57:12 IST Report Abuse
kulandhai Kannan விவசாயிகளை holy cowகளாக கருதுவது நிறுத்தப்பட வேண்டும். 80களின் தொடக்கத்தில் இங்கே நாராயணசாமி நாயுடு என்ற திமுக அனுதாபி, விவசாய சங்கம் என்ற பெயரில் ஆட்டம் போட்டார். MGR போட்ட போடில் அந்த சங்கமே காணாமல் போய்விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X