கோஹ்லி அதிவேக 12,000 ரன்கள்

Added : டிச 02, 2020
Share
Advertisement
கான்பரா: ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 12,000 ரன்கள் எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்தார் கோஹ்லி. ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தோற்ற இந்திய அணி 0-2 என தொடரை இழந்தது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று கான்பராவில் நடக்கிறது. இதில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்
kohli,  கோஹ்லி,

கான்பரா: ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 12,000 ரன்கள் எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்தார் கோஹ்லி.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தோற்ற இந்திய அணி 0-2 என தொடரை இழந்தது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று கான்பராவில் நடக்கிறது. இதில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு சுப்மன் கில் வாய்ப்பு பெற்றார். தவிர நவ்தீப் சைனி, முகமது ஷமி, சகாலுக்குப் பதில், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் இடம் பெற, தமிழகத்தின் நடராஜன், அறிமுக வாய்ப்பு பெற்றார்.கோஹ்லி 23 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 12,000 ரன்கள் எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்தார் கோஹ்லி. இவர் 242 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார். அடுத்த இடத்தில் இந்தியாவின் சச்சின் (300 இன்னிங்ஸ்) உள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (314), இலங்கையின் சங்ககரா (336), ஜெயசூர்யா (379), ஜெயவர்தனா (399) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X