ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த
sterlitte, ஸ்டெர்லைட்ஆலை, உச்சநீதிமன்றம்,

புதுடில்லி: ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிக அனுமதி அளிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாசு விதிகளை மீறி செயல்பட்டதால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது என தெரிவித்தது.


latest tamil newsதமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், பராமரிப்பு பணிகளுக்காக இடைக்காலமாக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நிராகரித்ததுடன், ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
03-டிச-202009:40:46 IST Report Abuse
Sampath Kumar இறைவன் விஷயத்தில் இறையாண்மை கிடையாது ஆப்பு சொல்லுது அப்டினா இறைவன் சந்நிதி முன்பு ஆன் பெண் வேற்றுமையும் கிடையது தானே ஆபு ?? சபரிமலை விஷயத்தில் நீதி மன்றம் சொன்னது சரிதானே ஆப்பு உண்மைமை சொன்னதுக்கு நன்றிஆப்பு
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
02-டிச-202021:44:40 IST Report Abuse
Loganathan Kuttuva சாராய ஆலைகளால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதில்லை.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
02-டிச-202020:41:51 IST Report Abuse
Rajagopal தமிழகத்தில் எதுவும் வர விடாதபடி தடுக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் கம்பெனி மூடுவதில் சீனாவின் கைகள் இருக்கலாம். இப்போது சீனாவிடமிருந்துதான் பற்றாக்குறை தாமிரத்தை இறக்குமதி செய்ய வேண்டும். கூடங்குளம் அணு உலையை எதிர்த்த "போராட்டத்தில்" அமெரிக்காவின் கரங்கள் இருந்தன. இதே போல கிரையோஜெனிக் என்ஜின் ஆராய்ச்சியைத் தடுக்க சி ஐ ஏ இரண்டு முக்கிய இந்திய விஞ்ஞானிகளை இழுத்தடித்து, சிறையில் தள்ளும்படி செய்து இருபது வருட தாமதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் பலவிதமான ஆராய்ச்சி மையங்கள், தொழில்கள் நிறுவப்படுவதைத் தடுக்கவும், தாமதம் செய்யவும், வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. அந்தப் பணம் பல என் ஜி ஓக்கள் மூலமாக போராட்டக் கும்பல்கள் கைகளுக்கு சென்று எதுவும் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன. மேலாகப் பார்த்தால் ஜன நாயக முறையில் எல்லாம் செய்வது போலவும், உரிமைக்குப் போராடுவது போலவும் ஜோடிக்கப் பட்டிருக்கும். வெளிநாடுகளில் சர்வதேச பத்திரிக்கைகளில் இந்தப் போராட்டங்களை ஆதரித்து எழுதுகிறார்கள். ஜார்ஜ் சோரோஸ் என்பவரைப் பற்றி படியுங்கள். பாஜகவை எதிர்ப்பதன் காரணமே அவர்கள் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதைத் தடுக்கவும், தாமதம் செய்யவும்தான். இப்போது எல்லா போராட்டங்களுக்கும் ஒரே மாதிரி ஆட்கள் பங்கேற்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பாஜகவை எப்படியாவது ஒரு அரக்கர் கட்சி போல காட்டி, அவர்களை விரட்டினால், வெளிநாட்டு சக்திகளுக்காக நாட்டை அடகு வைக்கும் கட்சிகளும், கும்பல்களும் பெரும் பயன் பெறும். சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பல விதங்களில் தங்களது ஆதாயத்திற்காக, தனியாகவும், சில சமயங்களில் ஒன்றிணைந்தும் செயல்படுகின்றன. இந்தியா வல்லரசாக விடாமல் இத்தனை முயற்சி. இங்கே பல எட்டப்பர்கள் தங்களது சுயநலத்திற்காக நாட்டை அவர்களுக்கு அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
வெற்றி நமதே, நிமிர்ந்துவிட்டோம், இனி குனிய மாட்டோம் - DMK வெற்றிபெற பாடுபடுவோம் ,இஸ்ல் ஆப் மேன்
02-டிச-202021:30:42 IST Report Abuse
வெற்றி நமதே, நிமிர்ந்துவிட்டோம், இனி குனிய மாட்டோம்அருமை அப்போ ஏன் இந்த ப்ராஜெக்ட் MODI குஜராத்தில் இருக்கும்போது வேண்டாம் என்றார் அப்புறம் MAHA ரசாத்ராவில் ஏன் வேண்டாம் என்றார்கள் ஒருவேளை அவர்கள் உங்கள் அளவுக்கு TECHNO SCIENCE குறைவோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X