புதுடில்லி : ஒடிசாவில் கொரோனா தொடர்பான பரிசோதனை கட்டணம், 1,200 ரூபாயில் இருந்து, 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில், தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் சார்பில், கொரோனா பாதிப்பை கண்டறியும் பி.சி.ஆர்., பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதற்கான அதிகபட்ச கட்டணமாக ரூ.2,200 ஆக இருந்த கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,200 ஆக மாநில அரசு குறைத்திருந்தது. இந்நிலையில், இந்த கட்டணத்தை, 400 ரூபாயாக குறைத்து, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே பி.சி.ஆர்., சோதனைக்கு மலிவான விலை நிர்ணயம் செய்த மாநிலமாக ஒடிசா திகழ்கிறது. டில்லியில் ரூ.800 பரிசோதனை கட்டணமாக குறைக்கப்பட்டது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE