கோஹ்லியின் ஒரு நாள் போட்டி சாதனை - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : டிச 03, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
கான்பெரா : ஒருநாள் அரங்கில் குறைந்த போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. அவரின் சாதனை டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இதேப்போன்று சர்வதேச அரங்கில் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த நடராஜனும் டிரெண்டிங்கிற்கு வந்தார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்
ViratKohli, 12,000ODI, ODIs, Nattu, Natarajan,

கான்பெரா : ஒருநாள் அரங்கில் குறைந்த போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. அவரின் சாதனை டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இதேப்போன்று சர்வதேச அரங்கில் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த நடராஜனும் டிரெண்டிங்கிற்கு வந்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி 2 - 0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இன்று(டிச., 2) மூன்றாவது மற்றும் கடைசி போட்டி கான்பெராவில் நடக்கிறது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்தது.


latest tamil news




இன்றைய போட்டியில் கோஹ்லி 63 ரன்கள் அடித்து அரை சதம் கடந்தார். போட்டியில் 23 ரன்கள் எட்டியபோது சர்வதேச அரங்கில் 12 ஆயிரம் ரன்களை கடந்தார். 242 இன்னிங்கிஸில் இந்த சாதனையை கோலி எட்டினார். இதற்கு முன்னர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்கிஸில் இந்த சாதனையை செய்து, சர்வதேச அரங்கில் 12 ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்தார். இப்போது அந்த சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார்.

மிக குறைந்த போட்டிகளில் இந்த சாதனையை கோஹ்லி செய்துள்ளதால் டுவிட்டரில் தேசிய அளவில் அவர் டிரெண்ட்டிங் ஆனார். சச்சினுக்கு பிறகு சர்வதேச அளவில் கோஹ்லி, பல சாதனையை புரிந்து வருகிறார். அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி இன்றைக்கு டுவிட்டரில் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். இன்னும் சிலர் சச்சினை மிஞ்சிய கோஹ்லி என புகழ்ந்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #ViratKohli, #12,000ODI, #ODIs போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.


latest tamil news





டிரெண்டிங்கில் நடராஜன்


இதேப்போன்று தமிழகத்தை சேர்ந்த நடராஜன் முதன்முறையாக சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டியில் இன்று களமிறங்கினார். அவரை வாழ்த்தியும் நிறைய டுவிட்டரில் கருத்து பதிவிட்டதால் #Nattu, #Natarajan ஆகிய ஹேஷ்டாக்குகளும் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranga Rao Narasimhan - Bangalore,இந்தியா
03-டிச-202008:36:14 IST Report Abuse
Ranga Rao Narasimhan ராதே கிருஷ்ணா நடராஜனுக்கு வாழ்த்துக்கள். நன்கு முன்னேற வாழ்த்துக்கள். கோஹ்லி சாதனை அபாரம். Bangalore
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
03-டிச-202005:08:05 IST Report Abuse
Nepolian S நடராஜன் பற்றி எதுவும் எழுதவில்லை..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-டிச-202022:51:51 IST Report Abuse
Ramesh Sargam கோஹ்லிக்கு வாழ்த்துக்கள். இருந்தாலும், இப்படி ஒரு தனி நபர் record -க்காக பல பேர் இந்தியாவில் விளையாடுகின்றனர். சாதிக்கட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அதைவிட முக்கியம் ஒரு அணி, இந்திய அணி, விளையாடும் எல்லா ஆட்டங்களிலும் ஆடி ஜெயித்து ரெகார்ட் செய்தால் அது எவ்வளவு மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும் எல்லா இந்தியர்களுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X