பக்தர்களை சிலிர்க்கவைத்த மகா தீபோற்சவம்.

Updated : டிச 02, 2020 | Added : டிச 02, 2020
Share
Advertisement
அந்த பரந்து விரிந்த மைதானத்தில் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பெண்களால் ஏற்றப்பட்ட நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்த காட்சி இன்னமும் பக்தர்கள் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது. கொரோனா காரணமாக நிறைய சட்டதிட்டங்கள் போடப்பட்டு அதில் பல நல்ல நிகழ்வுகளும் குறிப்பாக ஆன்மீக நிகழ்வுகள் முடக்கப்பட்டு வருகின்றன ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் கொரோனா




latest tamil news


அந்த பரந்து விரிந்த மைதானத்தில் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பெண்களால் ஏற்றப்பட்ட நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்த காட்சி இன்னமும் பக்தர்கள் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது.


latest tamil news



கொரோனா காரணமாக நிறைய சட்டதிட்டங்கள் போடப்பட்டு அதில் பல நல்ல நிகழ்வுகளும் குறிப்பாக ஆன்மீக நிகழ்வுகள் முடக்கப்பட்டு வருகின்றன ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் கொரோனா சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு அதே நேரம் பிரம்மாண்டத்தையும் விட்டுத்தராமல் பல நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.


latest tamil news


Advertisement


அதில் கடந்த 30 ந்தேதி திருப்பதியில் நடத்தப்பட்ட மகா தீபோற்சவமும் ஒன்று.காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விழாவிற்கு தலைமை தாங்கி ஆசியுரை வழங்கியதுடன் நெய் விளக்கினை ஏற்றிவைத்து நிகழ்வை துவக்கிவைத்தார்.


latest tamil news



‛பரேட்' மைதானம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.மைதானத்தில் ஐநுாறு நெய் விளக்குகள் ஏற்றும் வகையில் சமூக இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டு இருந்தது, அதனை பெண்கள் ஏற்றிவைத்தனர்.


latest tamil news



முன்னதாகவே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த மேடையில் மகாலட்சுமி சர்வ அலங்காரத்துடன் காட்சி தந்தார் அவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்ட பிறகு மகாலட்சுமி முன்னிலையில் மைதானம் முழுவதும் நெய் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலி ஜொலித்தது.


latest tamil news



நிகழ்ச்சியை முன்னிட்டு வெங்கடேஸ்வரா கல்லுாரி மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X