சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகர் கவுதம் கார்த்திக்கின் மொபைல்போன் பறிப்பு: இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Updated : டிச 03, 2020 | Added : டிச 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
01. உச்சநீதிமன்ற நீதிபதிகள், குடும்பத்தினரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனை, சென்னை ஆவடியில் போலீசார் கைது செய்தனர்.02. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நடிகர் கவுதம் கார்த்திக் மொபைல் போனை, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், பறித்து சென்றனர். இது தொடர்பாக அளித்த
கிரைம், ரவுண்ட்அப்,

01. உச்சநீதிமன்ற நீதிபதிகள், குடும்பத்தினரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனை, சென்னை ஆவடியில் போலீசார் கைது செய்தனர்.


latest tamil news02. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நடிகர் கவுதம் கார்த்திக் மொபைல் போனை, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், பறித்து சென்றனர். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news
03.சென்னை செனாய் நகரை சேர்ந்த மணிவண்ணன் என்பவர், குழந்தையின் தனியார் ஆன்லைன் வகுப்பிற்கு ரூ.13 ஆயிரம் செலுத்தி ஏமாந்துபோனார். அவரது பணத்தை, கீழ்பாக்கம் சைபர் கிரைம் போலீசார் வங்கியிலிருந்து பெற்று தந்தனர்.
04.தேனி மாவட்டம் கம்பம் அருகே அருகே சுருளி அருவியில், வேட்டைக்கு சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். அவனுடன் சென்ற 4 நாய்களும் உயிரிழந்தன. இதில் மர்மம் உள்ளதாக கூறி, சிறுவனது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

05.


மதுபோதையில் விஏஓ.,க்கள்

அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் ஊராட்சியில் பணியின் போது பணியின் போது, மதுபோதையில் இருந்ததாக பெரியநாகலூர் வி.ஏ.ஓ., புருஷோத்தமன், காமரசவல்லி விஏஓ சிவராஜன் ஆகியோரை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
விஏஓ.,விடம் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் கோமாரபுரத்தில், நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக வி.ஏ.ஓ., ஜெரோம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.06.ராணிப்பேட்டை மாவட்டம், செட்டித்தாங்கல் கிராமத்தில்,3 வயது சிறுமி கோபிகா, பாழடைந்த கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவரது சித்தி புஷ்பராணியை போலீசார் கைது செய்தனர். சொத்து பிரச்னை காரணமாக சிறுமி கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
07. நான்கு குழந்தைகள் மாயம் : பொள்ளாச்சி எல்.ஐ.சி., காலனி 2ல் வசிப்பவர் ரபிக் அகமது; இவரது மகள் ஹசினா பானு, 13, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மணிகண்டன் என்பவரின் மகள் ஸ்ரீவன் ஸ்ரீ, 11, ஆறாம் வகுப்பும், மகன் ஸ்ரீவனேஸ்வரன், 8, மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். பிரகாஷ் என்பவரின் மகன் தானுமலையான், 8, மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.நேற்றிரவு, குழந்தைகள் நால்வர், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், இவர்களின் பெற்றோர் வெளியில் வந்து பார்த்த போது, நால்வரும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. பதட்டமடைந்த பெற்றோர், பொள்ளாச்சி மகாலிங்கம் போலீசில் புகார் செய்தனர். குழந்தைகள் கடத்தப்பட்டனரா அல்லது வேறெங்கும் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக குழந்தைகள் உக்கடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
08. பெட்ரோல் பங்க்கில் புகுந்த பஸ்: கோவையில் முதியவர் பலி
கோவை, சாய்பாபாகாலனி - மதுக்கரைக்கு, தனியார் பஸ் தடம் எண்: 3பி பஸ் நேற்று காலை, உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு, புதிய மேம்பாலத்திற்கு கீழ் மதுக்கரைக்கு சென்றது. சூலுார், பட்டணத்தை சேர்ந்த டிரைவர் ரமேஷ், 32, பஸ்சை வேகமாக ஓட்டினார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் ஸ்கூட்டியில் சென்ற, பொள்ளாச்சி, முத்துாரை சேர்ந்த ராஜமாணிக்கம்,70, என்பவர் மீது மோதியது. பஸ்சின் முன் சக்கரத்தில் அவர் சிக்கிகொண்டார்.மோதிய வேகத்தில், இடதுபுறமாக டிரைவர்பஸ்சை திருப்பிய போது, கார் மற்றும் ஒரு பைக்கில்உரசிய படி பெட்ரோல் பங்க்கிற்குள் புகுந்தது. பஸ்சுக்குள் சிக்கிய ராஜமாணிக்கத்தை மீட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிந்தது. தப்பிய ஓடிய டிரைவர் ரமேஷ், பின்னர் கைது செய்யப்பட்டார்.
பெரும் ஆபத்து தவிர்ப்பு: கட்டுப்பாடு மீறி பங்கிற்குள் புகுந்த பஸ், பெட்ரோல் போடும் பம்பு மீது மோதியபடி நின்றது. நிற்காமல் தொடர்ந்து சென்றிருந்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக, பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.


இந்திய நிலவரம்


01.திரிபுரா மாநிலம் அகர்தலாவின் கும்லுங் பகுதியில் உள்ள ராதாபூர் முகாமில் ஜாதவ் தேகா என்ற சிஆர்பிஎப் வீரர், தான் வைத்திருந்த துப்பாக்கியால், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-202017:00:22 IST Report Abuse
Bhaskaran Chain mothiram onnumpodaliyaa intha kaarthik .verum phone mattum parichitupoitaanga polirukku
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X